இந்தியா

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு பிப்ரவரி 1ம் தேதி தூக்கு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லியில் பேருந்தில் நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை நாட்டையே உலுக்கியது.

அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் 4 பேரையும் வருகிற 22-ந்தேதி காலை 7 மணிக்கு தூக்கில் போட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தாக்கல் செய்த சீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து முகேஷ் சிங் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார்.

ALSO READ  மகளின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்த ரிக்‌ஷா தொழிலாளி- நேரில் வாழ்த்திய மோடி.!!!

முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிரகாரிக்க வேண்டுமென உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தது. இந்நிலையில் முகேஷ் சிங் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் தற்போது நிரகாரித்து உள்ளார்.

கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின் 14 நாட்கள் கழித்துதான் தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியும். கருணை மனு நிராகரிக்கப்பட்டதால், டெல்லி திகார் சிறை நிர்வாகிகள் புதிய தூக்கு தண்டனை தேதியை தெரிவிக்குமாறு கூறினார்.

ALSO READ  கொரோனா Hot Spot என்றால் என்ன..???

தற்போது நிர்பயா வழக்கில் புதிய தூக்கு தண்டனை தேதியை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இன்று முதல் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கொரோனா தடுப்பூசி !

News Editor

தொடரும் போராட்டம்; மத்திய அரசின் கோரிக்கைகளை நிராகரித்த விவசாயிகள்..!

News Editor

‘கோவேக்சின்’ போடும் பணி; மத்திய அமைச்சகம் அறிவிப்பு !

News Editor