அரசியல் தமிழகம்

5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு இருக்கா – இல்லையா!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் என மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. தமிழகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தேர்வுக்கான பாட அட்டவணை, தேர்விற்கான விதிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வகுத்துள்ளது.

5- ஆம் வகுப்பு மற்றும் 8- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்த கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதில் மாணவர்கள் பயின்ற பள்ளியில் இல்லாமல் வேறு ஒரு தேர்வு மையத்தில் தேர்வெழுத ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது.

2019 செப்ட்ம்பர் 22-ம் தேதி வெளியான தொடக்கக் கல்வித்துறை இயக்குனரக அறிவிக்கையில் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 1 கிலோமீட்டர் தொலைவிற்குள்ளும்,
8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கிலோமீட்டர் தொலைவிற்குள்ளும் தேர்வு மையங்களை அமைக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.

ALSO READ  இளைஞன் ஒருவனால் மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்…..

செப்டம்பர் மாதமே பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்ட நிலையில் அது தவறான தகவல் என்கிறார், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். அறிவிக்கையை முதன்மை கல்வி அலுவலர் திரும்பப் பெற்றதாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘டாக்டர்’ ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

News Editor

தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு..

Shanthi

பாஜகவிற்கு மரண அடி கொடுத்த மக்கள்; திருமாவளவன் பேச்சு !

News Editor