தமிழகம்

மறுபடியுமா?… தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

07.01.2022 டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் ராமநாதபுரம் மாவட்டங்களின் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

08.01.2022 & 09.01.2022 ஆகிய தேதிகளில் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10.01.2022 டெல்டா மாவட்டங்கள் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ALSO READ  தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு-சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

11.01.2022: டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னதுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்,

மூடுபனி எச்சரிக்கை : 07.01.2022 & 28.01.2022: மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் காலை நேரங்களில் இலேசான பனிமூட்டம் காணப்படும் என்றும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தொற்றால் புளியங்குடி டிஎஸ்பி உயிரிழப்பு… 

naveen santhakumar

வரிசையில் நிற்க வேண்டாம்… ஜன.1 முதல் வருகிறது அதிரடி மாற்றம்!

naveen santhakumar

குடிமகன்களால் காற்றில் பறக்கும் சமூக இடைவெளி…

naveen santhakumar