தொழில்நுட்பம்

போக்கோ சி-3 ஸ்மார்ட்போன் விலை குறைப்பு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்திய சந்தையில் போக்கோ சி3 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் அறிமுகமான குறுகிய காலக்கட்டத்தில் போக்கோ சி3 ஸ்மார்ட்போன் விற்பனையில் 10 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.

புதிய மைல்கல்லை அறிமுகமான மூன்றே மாதங்களில் போக்கோ எட்டியுள்ளது. விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளதை ஒட்டி போக்கோ சி3 ஸ்மார்ட்போன் ஜனவரி 24-ம் தேதி வரை தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.அதன்படி போக்கோ சி3 (3 GB + 32 GB ) ரூ. 6999 விலையிலும், 4 GB + 64 GB மாடல் ரூ. 7999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களின் விலையும் ரூ. 500 குறைக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர HDFC வங்கி கார்டுகளுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை போக்கோ சி3 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் HD பிளஸ் LCD டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.இத்துடன் புகைப்படங்களை எடுக்க 13 MB பிரைமரி கேமரா, 2 MB மேக்ரோ மற்றும் 2 MB டெப்த் சென்சார், 5 MB செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.டூ-டோன் டிசைன் கொண்டிருக்கும் போக்கோ சி3 ஸ்மார்ட்போன் 5000 MAHMA பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.


Share
ALSO READ  புத்தாண்டு அன்று வாட்ஸப்பில் இத்தனை மெசேஜ்களா?- அதிர்ச்சி தகவல்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீனாவை தொடந்து இந்தியாவில் அறிமுகமாகும் Haima 8S

Admin

விரைவில் விற்பனைக்கு வரும் Toyota Vellfire சொகுசு கார்

Admin

ஜியோவை விட அசத்தலான திட்டத்தை அறிமுகப்படுத்திய பிஎஸ்என்எல்

Admin