தொழில்நுட்பம்

மனிதர்களை போல் ’ரோபோக்களும் இனி இனப்பெருக்கம் செய்யும்’ – விஞ்ஞான உலகில் புது புரட்சி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உயிரினங்களை போல ரோபோக்களும் இனிமேல் இனப்பெருக்கம் செய்யும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Cell-based living robots can reproduce themselves | Engadget

எந்திரன் படத்தில் ரோபோ ரஜினி ஐஸ்வர்யா ராயிடம் குழந்தை உருவாக்குவது பற்றி பேசியிருப்பார். அதை திரையில் ஓகே, நிஜத்தில் சாத்தியமில்லை என்றே பலரும் நினைத்திருப்போம்.

ஆனால், புதிய சகாப்தத்தின் தொடக்கமாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்தான் இந்த இனப்பெருக்கம் செய்யக் கூடிய ரோபோக்களை உருவாக்கி இருக்கிறார்கள்.

அமெரிக்காவின் Vermont, Tuffs, Harvard ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆப்பிரிக்க தவளையின் ஸ்டெம் செல்களில் இருந்து தன்னைத் தானே மீளுருவாக்கம் செய்யக் கூடிய புதிய வகை ரோபோக்களை உருவாக்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சோதனையில் தற்போது முதல் முடிவு எடப்பட்டிருக்கிறது.

ALSO READ  எரிவாயுவில் இயங்கும் காரை தயாரிக்கும் மாருதி நிறுவனம்
They create the first living robots that reproduce spontaneously

அதன்படி, ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அளவில் உள்ள இந்த Xenobotsகள் குழுக்களாக இணைந்து செயல்படவும், நகரும் தன்மை கொண்டதாகவும், சுயமாக குணப்படுத்தக் கூடியதாகவும் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வகையான ரோபோக்கள் புற்றுநோய், பிறவியிலேயே ஏற்படும் குறைபாடுகளை களைய உதவும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறதாம். இதன் மூலம் மருத்துவத் துறையில் மிகப்பெரிய மாற்றம் நிகழும்.

ALSO READ  ‘End card’ போட தயாராகிறதா ஃவோடபோன் நிறுவனம்

இந்த ஜீனோபோட்கள் செல்ஃப் ப்ரோகிராம்ட் இயந்திரங்கள் தான், எனவே அவற்றை எளிதில் அனைத்துவிட (shutdown) முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதேசமயம் இந்த ஜீனோபோட்களின் இனப்பெருக்கம் என்பது பாதுகாப்பனதா? என்ற கேள்விக்கு பதில் எதிர்காலம் தன சொல்ல வேண்டும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

BMW-3 புதிய சீரிஸ் கிரான் லிமோசின் அறிமுகம் :

naveen santhakumar

இந்த போன்களில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது……உங்கள் மொபைலும் இந்த வரிசையில் உள்ளதா????

naveen santhakumar

Remove Chins Apps-ஐ நீக்கியது செய்தது கூகுள் பிளே ஸ்டோர்…

naveen santhakumar