தொழில்நுட்பம்

குவியும் பயனர்களின் புகார்கள்…! வாய் திறக்காத இன்ஸ்டாகிராம் நிறுவனம்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சமகால வாழ்க்கையில் வலைதளங்கள் நம்மை ஆட்சி செய்து கொண்டு இருக்கிறது. நமது வாழ்வில் சாப்பாடு உறக்கம் எப்படியோ, அப்படித்தான் சமூக வலைதளங்கள் நம் வாழ்க்கையில் பாதியை பறித்து வைத்திருக்கிறது. நம் அன்றாட நிகழ்வுகளை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து பொதுவெளியில் பகிர உதவும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் சேவையில் சில மாதங்களாக சிக்கல்கள் இருந்து வருவதாக அதன் பயனர்கள் புகார் அளித்துள்ளனர்.

பல பயனர்கள் தங்களது ஆண்ட்ராய்டு மொபைல் போனில் இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷனை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. என்றும், இதுதொடர்பாக 500க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகவும் DOWNDETECTOR.COM தளத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சிக்கல் குறித்து இன்ஸ்டாகிராம் நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்கு தளம் கொண்ட இரண்டு விதமான மொபைல் போன் பயனர்களும் இந்த சிக்கலை எதிர்கொண்டு வருவதாக கூறுகின்றனர்.

இந்த அப்ளிகேஷன் செல்போன் பழுதாகி விட்டதாக சிலர் எண்ணியதாகும் செய்திகள் வெளிவருகின்றன. இன்ஸ்டாகிராம் ஆப்பை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்து பார்த்தாலும் இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைக்கவில்லை எனவும் பயனர்கள் தங்களின் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ  இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் விளம்பர வசதி :

ஆனால் இதுகுறித்து அந்நிறுவனம் எந்த ஒரு அறிக்கையை தகவலை இன்றுவரை தெரிவிக்கவில்லை. தற்போது சமூக வலைதளங்கள் இந்த மாதிரி சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன. அண்மையில் கூகுள் நிறுவனத்தின் இணைய சேவைகள் பாதிக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விரைவில் விற்பனைக்கு வரும் Toyota Vellfire சொகுசு கார்

Admin

குறைந்த விலையில் கேமிங் ஹெட்போன் :

Shobika

TVS மோட்டார் நிறுவனத்தின் ஐ கியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் :

Shobika