உலகம்

ஈரான் உடன் நிபந்தனை இன்றி பேச்சுவார்த்தைக்கு தயார் : அமெரிக்கா

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில், ஈரான் ராணுவத்தளபதி சுலைமானி உயிரிழந்தார். இதையடுத்து இருநாடுகள் இடையே போர்பதற்றம் அதிகரித்தது. ஈராக்கில் அமெரிக்க துருப்புகள் செயல்பட்டு வந்த ராணுவத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

ஈரான் உடன் எந்த நிபந்தனையும் இன்றி பேச்சுவார்த்தைக்கு தயார் - அமெரிக்கா அறிவிப்பு

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு கருதி, ஈரான் உடன் எந்த நிபந்தனையும் இன்றி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அமெரிக்க தூதர் கெல்லி கிராஃப்ட் தெரிவித்துள்ளார். எந்த நாடும் தற்காப்புக்கான நடவடிக்கை எடுக்க ஐ.நா.சாசனத்தின் 51வது பிரிவு வகை செய்வதாகவும், அந்த அடிப்படையில் தற்காப்புக்காகவே சுலைமானியை கொன்றதாகவும் ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதிய கடிதத்தில் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் அமெரிக்க துருப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் தற்காப்புக்காகவே நடத்தியதாக ஐநாவுக்கான ஈரான் தூதர் மஜித் தெரிவித்துள்ளார்.

ALSO READ  உலகப் பணக்காரர்கள் வரிசையில் அம்பானியை பின்னுக்குத் தள்ளிய பெண்மணி...

ஐநாவுக்கு ஈரான் எழுதியுள்ள கடிதத்தில், போரையோ, நிலைமை மேலும் மோசமடைவதையோ தங்கள் தரப்பு விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் பிரதமர் மகன்!… 

naveen santhakumar

46-வது அதிபராக வெள்ளை மாளிகையில் தனது பணிகளை தொடங்கினார் ஜோ பைடன் :

naveen santhakumar

கொரோனாவை கட்டுப்படுத்த ஆபத்தான திட்டத்தை கையில் எடுக்கும் நாடுகள்…

naveen santhakumar