உலகம் சாதனையாளர்கள்

உலகிலேயே மிக இளம் வயது பிரதமர் இவர் தான் – சாதனைப் படைந்த பின்லாந்து பெண்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகிலேயே மிக இளம் வயது பிரதமர் இவர் தான் – சாதனைப் படைந்த பின்லாந்து பெண்

பின்லாந்து நாட்டில் 34 வது வயதிலேயே சன்னா மரின் என்ற பெண் பிரதமராகி ஒருவர் சாதனை புரிந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் பின்லாந்து நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சமூக ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெற்று 4 கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியில் அமர்ந்தது. இதில் சமூக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அண்டி ரின்னே, பிரதமராக பதவியேற்றார்.

ALSO READ  ஒரே ட்வீட்டில்  பிட்காயின்களின் விலை அதிகரித்த எலான் மஸ்க் !

ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக பின்லாந்தில் நடைபெற்ற தபால் துறை வேலைநிறுத்தம் நடைபெற்றது. இந்த விவகாரத்தை பிரதமர் அண்டி ரின்னெ சரியாக கையாளவில்லை என்று குற்றம்சாட்டிய கூட்டணி கட்சிகள் அவருக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டன. இதனால் அண்டி ரின்னே கடந்த 3 ஆம் தேதி பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து சமூக ஜனநாயக கட்சியின் பிரதமர் புதிய வேட்பாளர் தேர்வுக்கான வாக்கெடுப்பு நேற்று நடந்தது.

இதில் அதிக வாக்குகள் பெற்ற சன்னா மரின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் சன்னா மரின் உலகில் ஆட்சியில் இருக்கும் மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் சன்னா மரின் முன்னாள் பிரதமர் அண்டி ரின்னெ அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திடீரென நீல நிறமாக மாறிய கால்கள் : காரணம் என்ன தெரியுமா

Admin

இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் தீபாவளி பிரார்த்தனை!

Shanthi

ஆற்றில் மீன் பிடிக்க 10 ஆண்டுகள் தடை: அதிர்ச்சி அளிக்கும் சீனா

Admin