உலகம்

4 வருடத்திற்கு பின் இறந்த மகளை சந்தித்த தாய்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரிய நாட்டின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், விர்சுவல் ரியாலிட்டி (virtual reality) தொழில்நுட்பம் மூலம் 4 வருடங்களுக்கு முன் மரணித்த தனது 7 வயது குழந்தையை தாய் சந்திக்கும் காட்சி பார்வையளர்களை கலங்கடித்துள்ளது.

விர்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் இல்லாத ஒன்றை உருவாக்கும் தனி கலையாகும். ஒரு தனி உலகத்தை படைத்து அதற்குள் நம்மை பயணிக்க வைப்பதே இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பாகும்.

கொரிய நாட்டில் உள்ள ஊடகத்தில் இந்த தொழில்நுட்பம் சோதனை செய்யப்பட்டது. Meeting you என பெயரிடப் பட்ட நிகழ்ச்சியில், ஒரு பெண் கலந்து கொண்டார்.

ALSO READ  டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் நடந்த சுவாரசியமான விஷயம்

கடந்த 2016ம் ஆண்டு, தன்னுடைய மகளை, ஒரு நோயினால் இழந்தார். இதை கருத்தில் கொண்ட தொழில்நுட்பத்தினர், இறந்து போன குழந்தையிடம் தாய் உரையாடும் வகையில் ஏற்பாடு செய்தனர்.

விர்சுவல் ரியாலிட்டி உலகத்திற்குள் தாய் நுழைந்ததும், அந்த குழந்தையைக் கண்ட தாய் கதறி அழுதார். இருவருக்குமான உரையாடல் நீண்டு கொண்டே சென்றது. குழந்தையை பறிகொடுத்து தவிக்கும் தாயின் பாசப் போராட்டம், சுற்றி இருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நேபாள பிரதமர் கே.பி. ஒலி பதவி விலக கூறி ஆளும் கட்சி போர்க்கொடி… 

naveen santhakumar

கருந்துளையில் இருந்து முதன் முறையாக வெளிப்பட்ட ஒளி…

naveen santhakumar

ஐ.நா. வரை சென்ற சாத்தான்குளம் கொலை வழக்கு- முழு விசாரணை வேண்டும் ஐ.நா. பொதுச்செயலாளர்….

naveen santhakumar