உலகம்

அமெரிக்காவில் அதிக கொரோனா மரணங்களுக்கு காரணம் வெண்டிலேட்டர்கள் தான்- மருத்துவர்கள் பகீர்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூயார்க்:-

உலகின் மிகப்பெரிய சீரியல் கில்லர்- ஆக தற்போது கொரோனா வைரஸ் விளங்கிவருகிறது. உலகிலேயே கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட அமெரிக்கா திகழ்கிறது. இதுவரை அந்நாட்டில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் அதிக அளவு கொரோனா மரணத்திற்கு காரணம் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் செயற்கை சுவாச கருவி (Ventilators) தான் என்று டாக்டர்கள் கூறி வருகிறார்கள்.

பொதுவாக தீவிர சுவாச நோய் உள்ள நோயாளிகள் வென் ட்டிலேட்டர்களில் வைத்தாலும் கூட 40-50 பேர் மரணமடைந்து விடுவார்கள், ஆனால் நியூயார்க்கில் வெண்ட்டிலேட்டர்களில் வைக்கப்பட்ட 80%க்கும் அதிகமான கரோனா நோயாளிகள் மரணமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர், இதுதான் அங்கு புதிய கவலையாக உருவெடுத்துள்ளது.

இதுகுறித்து கூறிய சில டாக்டர்கள்:-

ALSO READ  கொரோனா வைரஸ் தாக்கிய இடத்தில் நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்

வெண்டிலேட்டர்களை பயன்படுத்துவதன் காரணமாக கொரோனா நோயாளிகளின் நுரையீரல் அதிகளவு பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்கள். மற்ற சுவாச சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கு வேண்டுமானால் வெண்டிலேட்டர்கள் உபயோகமாக இருக்கலாம். ஆனால் கொரோனா நோயாளிகளுக்கு உபயோகப்படவில்லை, எனவே இதற்கு மாற்று வழியை யோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்கள்.

உலகளவில் வெண்டிலேட்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கூட முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களை அதிகளவு வெண்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய கோரி மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க மருத்துவர்கள் கொரோனா நோயாளிகள் அதிகளவு உயிர் இழப்பதற்கு காரணம் வெண்டிலேட்டர்கள் என்று கூறியது பெரும் புதிராக உள்ளது.

ALSO READ  முதல்வர் கொரோனா காலத்தில் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கினார்; அன்புமணி !

இதே போன்று வெண்ட்டிலேட்டர் மரணங்கள் பிரிட்டன், சீனாவிலும் ஏற்பட்டுள்ளதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சீனாவில் வூஹானில் வெண்டிலேட்டர்களில் வைக்கப்பட்டவர்களில் 86% மரணமடைந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. 

இதுகுறித்து சில நிபுணர்கள் கூறுகையில்:-

ஏற்கெனவே பலவீனமடைந்துள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை வெண்ட்டிலேட்டர்கள் இன்னும் மோசமடையச் செய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற ஆய்வுகளின்படி மருத்துவ வெண்ட்டிலேஷன் நுரையீரல் நோயை மோசமாக்கவே செய்யும் என்கிறார்கள்.

எனவே வெண்டிலட்டர் குறித்து முடிவு ஏதும் எட்டப்படவில்லை காரணத்தால் பல மருத்துவர்கள் வென்டிலேட்டர் சென்னை பயன்படுத்துவதே இல்லையாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நியூயார்க் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இந்தியர்!

Shanthi

பெண் தான் என்பதை நிரூபிக்க வேண்டும்……அதிர்ந்த வீராங்கனை….

naveen santhakumar

”மேடம், இத நான் உங்க கிட்டச் சொல்லியே ஆகணும். நீங்க அவ்வளவு அழகு”…திரைப்பட பாணியில் நீதிபதியிடம் காதலை தெரிவித்த திருடன்…..

naveen santhakumar