உலகம்

அதிகாரத்தை பிடனிடம் ஒப்படைக்க டிரம்ப் அனுமதி :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன் :

அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வானார். 

ஆனால் நடப்பு அதிபரான டிரம்ப் ஜனநாயக கட்சியின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் தொடர் குற்றசாட்டுகளை முன் வைத்தார். பரவலான தேர்தல் மோசடி குறித்த ஆதாரமற்ற கூற்றுக்களை முன்வைத்து அதிபர் டிரம்ப் தேர்தலை ஒப்புக்கொள்ள மறுப்பு தெரிவித்து வந்தார். 

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கும் ஜோ பிடனுக்கு, முறையாக ஆட்சி அதிகார மாற்றம் செய்வதற்கு டொனால்டு டிரம்ப் சம்மதித்து இருக்கிறார். இருந்தபோதிலும் தாம் தேர்தலில் தோல்வி அடைந்து விட்டதாக அவர் இதுவரை முறைப்படி ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் சட்ட நடவடிக்கைகளில் டிரம்ப் அணியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதிபர் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து எதிர்ப்பேன் என உறுதியாகக் கூறியுள்ள போதும், பைடன் அதிபர் பதவியேற்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றை முறையாகச் செய்ய, ஜெனரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (GSA) எனும் முக்கியமான அரசு அமைப்பிடம் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்து இருக்கிறார்.

ALSO READ  டிரம்பின் 'தீவிர பக்தர்' மாரடைப்பால் காலமானார்...

அதிபருக்கான அதிகார மாற்றங்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், அந்த நடவடிக்கைகளை ஜெனெரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு தொடங்கும் என்றும் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஜோ பிடன் அணியினர், இந்த அதிகார மாற்றத்தின் தொடக்கத்தை வரவேற்று இருக்கிறார்கள். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரவும், நாடு சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளவும், இன்று எடுத்திருக்கும் முடிவுகள் அவசியமான ஒன்று என்று கூறி இருக்கிறார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

103 வயதில் 14000 அடி உயரத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்து கின்னஸ் சாதனை படைத்த முதியவர்…. 

naveen santhakumar

46,000 ஆண்டுகால பூர்வக்குடிகளின் பாரம்பரிய பாறைக்குகைகளை வெடி வைத்துத் தகர்த்த கார்பரேட் நிறுவனம்: பூர்வகுடிகள் கொந்தளிப்பு…

naveen santhakumar

கென்யாவில் வரிக்குதிரையுடன் கண்டுபிடிக்கப்பட்ட புதிய விலங்கு… பெயர் என்ன தெரியுமா..???

naveen santhakumar