உலகம்

10 ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்த அரிய கங்கண சூரிய கிரகணம்- வீடியோ உள்ளே..!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அரிய நிகழ்வான கங்கண சூரிய கிரகணம் ஏற்பட்டது. இந்த கங்கண சூரிய கிரகணம் இந்தியாவில் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் தெரிந்தது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் கங்கண சூரிய கிரகணம் சரியாக 10:15 மணிக்கு தொடங்கி மதியம் 1:45 மணி வரை நீடித்தது. சென்னையை பொறுத்தவரையில் சரியாக 10.25 மணிக்கு தொடங்கி மதியம் 1:41 மணி வரை நீடித்தது. தமிழ்நாட்டில் பொறுத்தவரையில் இன்று சூரிய கிரகணம் 12 மணி வாக்கில் தெளிவாக தெரிந்தது. 

courtesy.

நாட்டின் பிற பகுதிகளில் காலை 9.15 மணிக்கு தொடங்கிய இந்த சூரிய கிரகணம் 3.04 மணி வரை நீடித்தது. வட இந்தியப் பகுதிகளில் உட்சபட்சமாக பகல் 12:10 மணி வாக்கில் தெரிந்தது.

ALSO READ  சிரியாவில் வெடிகுண்டு தாக்குதல்…. 17 பேர் உயிரிழப்பு... 53-கும் மேற்பட்டோர் படுகாயம்….
courtesy.

இதுபோல் சவுதி அரேபியா, மத்திய கிழக்கு, மத்திய ஆப்பிரிக்கா, தெற்கு சீனா மற்றும் பிற ஆசிய நாடுகள் ஆகிய பகுதிகளில் இந்த கங்கண சூரிய கிரகணம் தென்பட்டது.

ரஷ்ய பகுதியில் காணப்பட்ட சூரிய கிரகணம்.

ஆசியா, ஆப்பிரிக்கா, பசிபிக் பகுதிகள், இந்திய பெருங்கடல் பகுதி, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் ஒரு சில பகுதிகள் ஆகியவற்றில் இந்த கங்கண சூரிய கிரகணம் நிகழ்வு தென்பட்டது. 

ALSO READ  நிஜ பறவை இறகுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இயந்திர பறவை

இந்த வருடத்தில் மொத்தம் இரண்டு சூரிய கிரகணங்கள். முதல் கிரகணம் இன்று நிகழ்ந்துவிட்டது. அடுத்த சூரிய கிரகணம் வரும் டிசம்பர் 14ம் தேதி தோன்ற உள்ளது. டிசம்பர் 14ம் தேதி தோன்றும் இரண்டாவது சூரிய கிரகணத்தை தென்அமெரிக்கா, அட்லாண்டிக் பகுதி, பசிபிக் ஆகிய பகுதிகளில் தெளிவாக காணமுடியும். இந்திய பெருங்கடல், ஆப்பிரிக்கா மற்றும் அண்டார்டிகா ஆகியவற்றில் சில பகுதிகளில் தென் பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வட கொரிய அதிபர் கிம் உடல்நிலை கவலைக்கிடம்… வடகொரியாவின் ரிசார்ட் ஒன்றில் நிறுத்தப்பட்டுள்ள கிம்மின் ரயில்…

naveen santhakumar

பாலைவனத்தில் நிறுத்தப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான விமானங்கள்..

naveen santhakumar

வெள்ளத்தில் தத்தளிக்கும் சீனா; லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றம்… 

naveen santhakumar