உலகம்

வெள்ளத்தில் தத்தளிக்கும் சீனா; லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றம்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெய்ஜிங்:-

ஹீரா முழுவதும் கடும் பனிப்பொழிவு காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

சீனாவின் அனைத்து மாகாணங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். 

சீனாவின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக 60,000 மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

சீனாவின் ஜியாங்ஸி (Jiangxi) மாகாணத்தில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்களில் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜியாங்ஸி மாகாணத்தில் 27,800 ஹெக்டேர் பரப்பளவு விளைநிலம் நீரில் மூழ்கியுள்ளது. வெள்ளச் சேதம் காரணமாக இந்த மாகாணத்தில் 260 மில்லியன் யுவான்கள் இழப்பு (37 மில்லியன் டாலர்கள்) ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ  சீனா எல்லையை மூட வலியுறுத்தி ஹாங்காங் மருத்துவர்கள் 'ஸ்டிரைக்’

அன்ஹுய் (Anhui), ஜியாங்ஸி (Jiangxi), ஹூபே (Hubei), குய்ஸவ் (Guizhou), குவாங்சி (Guangxi), ஸுவாங் தன்னாட்சி மாகாணம் (Zhuang Autonomous Region) ஸேஜியாங் (Zhejiang Province) ஆகியவை வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளாக திகழ்கின்றன.

ALSO READ  இது kung fu அரசியல்- அரசியலில் குதிக்க விருப்பம் தெரிவித்துள்ள ஜாக்கி சான்…!

சீனாவின் அவசர மேலாண்மை அமைச்சகம் (Ministry Emergency Management) 615 மில்லியன் யுவான்கள் வெள்ள நிவாரண நிதியாக ஒதுக்கியுள்ளது.

இதேபோல ஜப்பான் நாட்டிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது ஜப்பானின் மத்திய மாகாணமான டோகை (Tokai) மாகாணத்தில் கட்டும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. 

ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள க்யுஷு (Kyushu) தீவிலும் வெள்ளப்பெருக்கு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Ph.D மாணவி விமான நிலையத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்:

naveen santhakumar

கொரோனா நோயாளிகளுக்காக விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் பயன்படுத்திய வெண்டிலேட்டர் வழங்கிய குடும்பத்தினர்….

naveen santhakumar

நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தினம்(ஜூன்-12)

Shobika