உலகம்

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரியாத் :

சவுதியில் 3,61,903 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 3,52,815 பேர் குணமடைந்தனர். 6,168 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாத தொடக்கத்தில் பைசர் மற்றும் பயோ என்டெக்  இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசிக்கு சவுதி அரேபியாவின் உணவு மற்றும் மருந்து ஆணையம் ஒப்புதல் அளித்தது.டிசம்பர் 16 ம் தேதி சவுதி அரேபியா முதல் முறையாக பைசர் தடுப்பூசி டோஸ்களை பெற்றது. 

1,00,000 க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் தவ்ஃபிக் அல் ரபியா  கடந்த வாரம் தெரிவித்தார்.இந்நிலையில், சவுதி சுகாதார அமைச்சகத்தினால் செயல்படுத்தப்படும் தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தனது முதல் டோஸ் பைசர்  கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.இளவரசர் சல்மானுக்கு இடது கையில் தடுப்பூசி போடும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ALSO READ  சென்றதோ தேனிலவு…..சேர்ந்ததோ கல்லறையில்…...

முன்னதாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் பைசர் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்து, தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.சில தினங்களுக்கு முன் அமெரிக்க ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன்பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவில் பெண் டாக்டரை சுட்டுக்கொன்று விட்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆண் டாக்டர் தற்கொலை:

naveen santhakumar

மலேசியாவில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாடு!

Shanthi

கொரோனாவிற்கு அஞ்சி விமான நிலையத்திற்குள் 3 மாதங்களாக ஒளிந்திருந்த நபர்:

naveen santhakumar