உலகம்

மலேசியாவில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாடு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

11 ஆம் உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் ஜூலை 21 – 23 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் 136 நாடுகளிலிருந்து தமிழறிஞர்கள், பிற மொழி அறிஞர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் என 63 மொழி பேசும் அறிஞர் பெருமக்கள் அழைக்கப்பட உள்ளார்கள். மேலும் தமிழகம் தவிர பிற இந்திய மாநில மற்றும் பிற நாடுகளில் உள்ள ஆயிரம் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் அழைக்கப்பட உள்ளார்கள். இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் தமிழ் பத்திரிக்கை காட்சி ஊடகம், சமூக ஊடகம், தமிழர் உணவு, மருத்துவம், கலை, கைத்திறன், நெசவு வணிகம் போன்றவற்றிற்கு தனி தனி அரங்குகள் அமைக்கப்படும் என்றும் மன்றம், கழகம், சங்கங்களுக்கு தனி அமர்வு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் பள்ளி, கல்லூரி பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது. மேலும் இந்தியாவில் வெளிவந்த மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் சிறந்த தமிழ்க்கவிதைத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு, கதைத் தொகுப்பு, நாவல் மொழிபெயர்ப்பு நூலுக்கு என தனித்தனியாக பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது. இம்மாநாட்டில் சிறந்த தமிழ்ச் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழரின் தொழில், பிற மாநில மற்றும் நாட்டின் தொழில்கள் பற்றிய கருத்தரங்கு, கண்காட்சிக்கு தனி அரங்குகள் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால் தமிழில் வெளிவந்த சிறந்த கவிதைகள், கட்டுரைகள், கதைகள், 63 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது.


Share
ALSO READ  மேலாடை காரணமாக விமானத்தில் ஏற பெண்ணுக்கு தடை
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மகாத்மா காந்தி கவுரவிக்கும் வகையில் நாணயம் வெளியிடும் இங்கிலாந்து… 

naveen santhakumar

ஆச்சரியம்….ஆனால் உண்மை….இந்த நாட்டு கடிகாரத்தில் மட்டும் 11 எண்கள் தான் இருக்கு….

naveen santhakumar

அட இஸ்ரேலின் இரும்பு பெண்ணா இவர்…..

Admin