உலகம்

ஆஸ்திரேலியாவில் தீயணைப்பு விமானம் விபத்து

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு மாகாணங்களில் கடந்த 4 மாதங்களாக காட்டுத்தீ எரிந்து வருகிறது.

இந்த காட்டுத்தீயில் பல லட்சம் ஏக்கர் அளவிலான நிலப்பரப்பு எரிந்து நாசமானதோடு, ஆயிரக்கணக்கான வீடுகளும் தீயில் தரைமட்டமாகின.

அதோடு லட்சக்கணக்கான வனவிலங்குகளும் செத்து மடிந்தன.

ஆஸ்திரேலியக் காட்டுத் தீ

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் காட்டுத்தீ எரிந்து வரும் இடங்களில் தண்ணீர் தெளிப்பதற்காக ‘ஹெர்குலஸ் சி 130’ ரக சரக்கு விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

heli

விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அதனை தொடர்ந்து, மாயமான விமானத்தை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

ALSO READ  கண்களில் நீண்ட நாட்கள் தங்கியிருக்கும் கொரோனா- வைரஸ் அதிர்ச்சி ரிப்போர்ட்....
Image result for ஆஸ்திரேலியாவில் தீயணைப்பு விமானம் விபத்து

இதில் அங்குள்ள ஒரு மலைப்பாங்கான பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் அமெரிக்க வீரர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Image result for ஆஸ்திரேலியாவில் தீயணைப்பு விமானம் விபத்து

அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. விமானம் விபத்தில் சிக்கியது எப்படி என்பது உடனடியாக தெரியவில்லை.

ALSO READ  மெகுல் சோக்சியின் ஜாமீன் மனுவை நிராகரித்தது நீதிமன்றம் ..!

இது குறித்து தீவிர விசாரணை நடத்த நியூ சவுத் வேல்ஸ் மாகாண தலைவர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் உத்தரவிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் ஹைபர்சானிக் ஆயுதங்கள் கடற்படையில் சேர்ப்படுவதாக புதின் அறிவிப்பு…. 

naveen santhakumar

ரஷ்யாவிற்கு கனடா ஆதரவு அளிக்காது – ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டம்…

naveen santhakumar

இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் பிரதமர் மகன்!… 

naveen santhakumar