உலகம்

ரஷ்யாவிற்கு கனடா ஆதரவு அளிக்காது – ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஒட்டாவா:-

G7 அமைப்பில் மீண்டும் ரஷ்யாவை உறுப்பினராக இணைப்பதற்கு கனடா ஆதரவு தராது என்று கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 

ஜி7 மாநாட்டை செப்டம்பர் மாதம் வரை தள்ளி வைப்பதாக அறிவித்த அதிபர் டிரம்ப், இந்த மாநாட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை இணைக்க விருப்பம் தெரிவித்திருந்தார். 

இதனிடையே இதுகுறித்து கருத்து தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ:-

சர்வதேச சட்டங்களை தொடர்ந்து மீறும் ரஷ்யாவிற்கு கனடா ஒருபோதும் ஆதரவளிக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ALSO READ  இந்தியாவின் கோவேக்சின், கோவிஷீல்டுக்கு 96 நாடுகள் அங்கீகாரம் - மத்திய அரசு

ஒருவேளை ஜி7 மாநாட்டிற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் வந்தால் நீங்கள் அந்த மாநாட்டில் பங்கேற்கிறார் என்று ஜஸ்டின் ட்ரூடோ-ன் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதில் ஏதும் அளிக்கவில்லை. மேலும் மாநாடு தொடங்குவதற்கு முன்பு விவாதிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளது பிறகு பார்க்கலாம் என்று கூறினார். அதேவேளையில் ஜி-20 அமைப்பில் ரஷ்யா உறுப்பினராக உள்ளது. ஆனால் எங்களுக்கு அவர்களுக்கும் பெரிய உறவுகள் இல்லை இல்லை என்று ட்ரூடோ தெரிவித்தார்.

ALSO READ  இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றார் மீராபாய் சானு …

ரஷ்யா கிரீமியா பகுதியை ஆக்கிரமித்து உக்ரேன் மீது பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டதால் 2014ஆம் ஆண்டு ஜி8 அமைப்பில் இருந்து ரஷ்யா நீக்கப்பட்டது. அப்போது அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவால் பிரதமர் அம்ப்ரோஸ் லாமினி பரிதாபமாக உயிரிழந்தார்:

naveen santhakumar

அறிவியலாளர் ஜகதீஷ் சந்திர போஸ் மறைந்த தினம்

Admin

மூன்றாவது முறையாக அமெரிக்காவின் செனட் உறுப்பினராக தேர்வான தமிழகத்து தாரகை:

naveen santhakumar