உலகம்

உலகத்தை காப்பது நமது கடமை தான், அச்சுறுத்தும் புவிவெப்பமயமாதலின் காலநிலை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகத்தை காப்பது நமது கடமை தான்…அச்சுறுத்தும் புவிவெப்பமயமாதலின் காலநிலை…..

பல்வேறு வகையான காலநிலை மாற்றம் பலவிதமான நவீன தொழில்நுட்ப வளர்ச்சி இதற்கிடையில் காற்றையே காசுக்கு வாங்கும் விபரீதங்கள் அடுத்த ஐம்பது ஆண்டு என்ன நிகழப்போகிறது……

பலவருடங்களாகவே உலகில் காலநிலை மாற்றம் என்பது மிகவும் மோசமான நிலையிலேயே இருந்து வருகிறது. ஓசோன் படலம் பாதிப்பு, காற்று மாசு, நீர் பற்றாக்குறை, பருவமழையின்மை, புவியின் வெப்பநிலை மாற்றம் என பல நிகழ்வுகள் நம்மை பெரிய அளவில் அச்சுறுத்திக்கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் பருவநிலையை பற்றி உலகின் தலைச்சிறந்த குழு ஒன்று ஆராயத் தொடங்கியது..

ALSO READ  நைஜீரியருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய 8 வயது ISIS சிறுவன்

அதில் பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்தில் உள்ளபடி புவிவெப்ப அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவைவிட குறைக்க வேண்டும் என்றும் இதனை நோக்கி அனைத்து நாடுகளும் பயனிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.ஆனால் தற்பொழுது இந்த புவி வெப்பம் அதற்கு நேர்மாறாக அதிகரிக்கின்றது என்று எச்சரித்துள்ளனர்… அதாவது புவிவெப்ப அதிகரிப்பு 3 டிகிரி செல்சியஸ் அளவை நோக்கி செல்வதாகவும் இது எதிர்காலத்திற்கு பெறும் ஆபத்தானது என்றும் கூறுகின்றனர்.

வெப்பம் இதே அளவு தொடர்ந்தால் கடுமையான வறட்சி, காட்டுத்தீ,வெள்ளம் போன்ற பேரிடர் ஆபத்துகள் ஏற்படும். இதன் காரணமாக மோசமான உணவு பஞ்சமும் ஏற்படலாம் என்கின்றனர்….. இதைத்தடுக்க பருவநிலை மாற்றத்திற்கான குழு ஆய்வரிக்கையை தயாரித்த முதன்மையானவர்களான அரோமர் ரெவி மற்றும் டெப்ரா அவர்கள் கூறியதாவது நகரின் போக்குவரத்தாலும் நெகிழி பயன்பாட்டாலுமே பெரிதளவில் ஓசோன் படல பாதிப்புக்கும் புவி வெப்பமயமாதலுக்கும் முக்கிய காரணம் என்கினறனர்.

ALSO READ  கொரோனாவிற்கு அஞ்சி விமான நிலையத்திற்குள் 3 மாதங்களாக ஒளிந்திருந்த நபர்:

இதிலிருந்து நம்மைக்காக்க நெகிழி பயன்பாட்டை குறைப்பது, போக்குவரத்தால் ஏற்படும் மாசுபாட்டையும் அதனால் ஏற்படும் விளைவை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பதுமே ஆகும். பசுமையான இடங்களை உருவாக்குவதன் மூலம் நல்ல காற்றையும் மாசுபாடு இல்லா நகரத்தையும் உருவாக்க முடியும் இதனால் பருவமழையின் தாக்கமும் அதிகரிக்கும் என்கின்றனர்……


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாக். இராணுவத்தின் மனித உரிமைமீறல்களை விமர்சித்த PTM தலைவர் கைது

Admin

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நிலவரம்:

naveen santhakumar

வந்ததும் வேலையை காட்டிய கிம்… தென் கொரியா மீது காரணமின்றி திடீர் தாக்குதல்….

naveen santhakumar