சினிமா

தர்பார் படத்தின் டிரெய்லர் வெளியீடு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது.

( https://youtu.be/1JlLi9pDaJE )

பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வர உள்ள தர்பார் படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

ALSO READ  மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு

பல ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி போலீஸ் கெட்டப்பில் நடித்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தர்பார் படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6.30 மணி அளவில் வெளியாகும் என கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

ஆனால் அறிவித்த நேரப்படி தர்பார் டிரெய்லர் வெளியாகவில்லை. சுமார் 20 நிமிட தாமதமாக வெளியான டிரெய்லரில் பல ஆண்டுகளுக்கு பிறகு துறுதுறுப்பான கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அடுத்த ஆட்டத்திற்கு ரெடியான மீரா…..நித்தி மீது லாட்ஸ் ஆஃப் லவ்….

naveen santhakumar

மீண்டும் படப்பிடிப்பை தொடங்கும் ‘AV 33’ படக்குழு !

News Editor

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு வெளிநாட்டினர் நடனமாடும் வீடியோ- இணையத்தில் வைரல்

naveen santhakumar