இந்தியா

பீட்சா டெலிவரி பாய்க்கு கொரோனா.. 72 குடும்பங்களின் கதி என்ன?….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

 டெல்லி:-

டெல்லியில் பீட்சா டெலிவரி செய்யும் நபர் ஒருவருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் டெலிவரி செய்த 72 குடும்பங்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளன.

தெற்கு டெல்லியின் மால்வியா நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயதான பீட்சா டெலிவரி செய்யும் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 20 நாட்களாக அவர் பீட்சா டெலிவரி செய்த ஹவுஸ் காஸ் பகுதி, மால்வியா நகர்  சாவித்திரி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 72 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

ALSO READ  லக்கிம்பூர் வன்முறை - 8 பேர் உயிரிழப்பு : மத்திய அமைச்சரின் மகன் மீது கொலை வழக்குப்பதிவு

அதோடு அந்த நபருடன் தொடர்பில் இருந்த சக டெலிவரி  செய்யும் நபர்கள் 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த நபர் டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா (R.M.L) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரோடு தொடர்பில் இருந்த டெலிவரி செய்யும் நபர்கள் சந்தர்பூரில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

ALSO READ  விவசாயிகள் போராட்டத்திற்கு நடிகை மியா கலிஃபா ஆதரவு !

இந்த நபருக்கு பயணம் வரலாறு (Travel History) எதுவும் இல்லை ஒருவேளை இவர் டெலிவரி செய்த இடங்களில் எவருக்கேனும் கொரோனா பாதிப்பு இருந்து அதன் மூலம் இவருக்கு பரவியிருக்கலாம் என்று  அதிகாரிகள் கூறி வருகிறார்கள்.

டெல்லியில் இதுவரை 1600க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்க சீரம் நிறுவனம் திட்டம் …!

naveen santhakumar

‎olbg Gambling Tips On The App Stor

Shobika

Mostbet Kz Онлайн Казино Ресми Сайты Слоттар + Two Hundred And Fifty Fs Мостбет Кз Официальный Сайт

Shobika