உலகம்

உலகப் பணக்காரர்கள் வரிசையில் அம்பானியை பின்னுக்குத் தள்ளிய பெண்மணி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூயார்க்:-

கொரோனா பரவல் காரணமாக ஒட்டுமொத்த உலக நாடுகளின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. பல்வேறு துறைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளது. ஆனால் இந்நிலையிலும் உலக பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறியுள்ளனர்.

அந்த வகையில் அமேசான் நிறுவனத்தினர் ஜெஃப் பெஸோஸின்  முன்னாள் மனைவி மெக்கன்சி பெஸோஸ் இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியை முந்தி உள்ளார். உலக பணக்காரர் வரிசையில் மெக்கன்சி பெஸோஸ் தற்பொழுது 18வது இடத்தில் உள்ளார்.

முகேஷ் அம்பானி 19 ஆயிரத்திற்கு இறங்கியுள்ளார். அம்பானி தொடர்ந்து மெக்சிகோவின் கார்லோஸ் ஸ்லிம் (Carlos Slim) உள்ளார்.

மெக்கன்சி பெஸோஸ் அமேசான் நிறுவனத்தின் 4 சதவீத பங்குகளை தன் வசம் வைத்துள்ளார். இவர் ஒரு நாவல் ஆசிரியர் மற்றும் சமூக சேவகர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டுக்கான இவரது நிகர மதிப்பு 8.3 பில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளது. தற்பொழுது உலக அளவில் பணக்கார பெண்மணிகள் வரிசையில் 4,490 கோடி அமெரிக்க டாலர்களுடன் மெக்கன்சி பெஸோஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ALSO READ  ஆசிய கண்டத்திலேயே காஸ்ட்லியான விவாகரத்து…

ஃபரான்காய்ஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ் (Françoise Bettencourt Meyers) 5,450 கோடி அமெரிக்க டாலர்களுடன் உலக பணக்கார பெண்மணிகள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் 58.6 பில்லியன் டாலருடன் இருந்த அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த மார்ச் மாதத்தில் 41 சதவீதம் குறைந்து 34.4 பில்லியன் ஆக குறைந்தது.

ALSO READ  வாரன் பஃபெட் -ஐ பின்னுக்கு தள்ளிய முகேஷ் அம்பானி! 

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் நிகர மதிப்பு 24 பில்லியனில் இருந்து 138.5 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது.

அமேசான் நிறுவனம் ஜெஃப் பெஸோஸை தொடர்ந்து டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் உள்ளார்.

உலக அளவில் மக்கள் அனைவரும் வீடுகளிலேயே உள்ள காரணத்தால் Zoom செயலியின் பயன்பாடு அதிகரித்து Zoom நிறுவனத்தின் சொத்து மதிப்பு 7.4 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 1,900 சதவீதம் இவரின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஹிந்து மதத்தை இழிவு செய்யும் வகையில் புத்தகத்தில் இடம்பெற்ற கருத்து:

naveen santhakumar

கொரோனோ பரவுவதை தடுக்க வித்தியாசமான ஐடியா…கார் டிரைவர் அசத்தல்..!!!

naveen santhakumar

நிருபர்களுடன் கடும் வாக்குவாதம்- பாதியிலேயே செய்தியாளர்கள் சந்திப்பை நிறுத்திய ட்ரம்ப்…

naveen santhakumar