உலகம்

வாரன் பஃபெட் -ஐ பின்னுக்கு தள்ளிய முகேஷ் அம்பானி! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூயார்க்:-

உலக பணக்காரர்கள் பட்டியலில் வாரன் பஃபெட் (Warren Buffett)-ஐ பின்னுக்கு தள்ளி 7வது இடத்தை பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி.

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவில் கடந்த 2 மாதங்களாக உலகின் பல்வேறு பிரபல நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன. கடந்த ஏப்ரல் 22ம் ஆண்டு முதல் ஜியோவில் 12 நிறுவனங்கள் மொத்தமாக ரூ. 1,17,588.45 கோடி முதலீடு செய்து 25.09 சதவீதம் பங்குகளை வாங்கியது. இதனையடுத்து ரிலையன்ஸ் நிறுவனம் நிகர கடன் இல்லாத நிலையை அடைந்து விட்டதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

ALSO READ  ஊழியர்களின் ஓய்வை ‘ஓசி’யில் கேட்பதா??அமேசானை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.....

மார்ச் 31, 2020க்குள் இந்த நிலையை அடைய வேண்டும் என திட்டமிட்டிருந்த நிலையில், முன்னதாகவே இலக்கை அடைந்ததன் மூலம் பங்குதாரர்களுக்கு தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். 

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் முகேஷ் அம்பானி இடம்பிடித்திருந்தார். கொரோனா பாதிப்பால் பல நிறுவனங்கள் சரிவை சந்தித்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடுகள் குவிந்தன. இந்நிலையில் பணக்காரர்களின் பட்டியலில், முகேஷ் அம்பானி 68.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருந்த அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 2 பில்லியன் டாலர்கள் அதிகரிப்பே 70.1 பில்லியன் டாலராக உள்ளது. 67.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் வாரன் பஃபெட் 8-வது இடத்தை பிடித்துள்ளார். வாரன் பஃபெட் சுமார் 2.9 பில்லியன் டாலர்களை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியதால் அவரது சொத்து மதிப்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ  டிக்-டாக் தடை: 6 பில்லியன் நஷ்டம்- குளோபல் டைம்ஸ்...

அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் 188.2 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். 110.5 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் பில்கேட்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவில் வன்முறையில் காந்தி சிலை அவமதிப்பு: மன்னிப்பு கோரிய தூதரகம்..

naveen santhakumar

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே தொடரும் மோதல்; செத்து மடியும் பொதுமக்கள் ! 

News Editor

அடடே…!!!! இந்த ஐடியா கூட நல்லாதான் இருக்கு….கல்வி கட்டணத்திற்கு பதில் தேங்காய்…..

naveen santhakumar