தமிழகம்

கொரோனா பணக்காரர்களின் நோய்; அவர்கள் தான் வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்தார்கள்- முதல்வர் பழனிசாமி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்:-

பணக்காரர்களால் கொண்டு வரப்பட்ட நோய் இது. வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த நோய் இது. ஏழைகளுக்கு நோய் இல்லை. அவர்களிடம் தாராளமாகப் பேசலாம். பணக்காரர்களைக் கண்டால் தான் பயமாக இருக்கிறது. வெளிநாடுகளுக்குச் சென்று வந்து நோயை இறக்குமதி செய்துள்ளனர். தமிழ்நாட்டில் இந்த நோய் உருவாகவில்லை

ALSO READ  கொரோனா எதிரொலி; தமிழக-கேரளா எல்லை தீவிர சோதனை !

கொரோனாவை தடுப்பதில் தமிழக அரசு முன்கூட்டியே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கான அனைத்து மருத்துவ உபகரணங்களும் தமிழகத்தில் போதிய அளவு உள்ளன. இந்தியாவிலேயே தமிழகம்தான் முன்னெச்சரிக்கையாக மருத்துவ உபகரணங்களை வாங்கி வைத்துள்ளது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும். இனி வரும் காலங்களில் குணமடைந்து வருவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம் என முதலமைச்சர் தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாமியார் மற்றும் மனைவியின் டார்ச்சரால் இறந்த கணவன்:

naveen santhakumar

ஆசிய அரேபியா வர்த்தக மைய துவக்க விழா !

News Editor

கோவையில் அதிகரிக்கும் கொரோனா; திடீரென ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் !

News Editor