உலகம்

வன்கொடுமைக்கு உள்ளான பெண்களுக்கு அபராதம் விதித்த போலீசார்.. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரஷ்யாவில் ஊரடங்கு இப்போது வெளியே  சுற்றிய இளம்பெண்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு மீறி வெளியே சுற்றிய குற்றத்திற்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

க்ரஸ்நோயார்ஸ்க்:-

ரஷ்யாவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அவசர தேவைகள் இன்றி பொதுமக்கள் வெளியே வருவது தடை செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள க்ரஸ்நோயார்ஸ்க் (Krasnoyarsk) நகரைச் சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இளம் பெண்கள் இருவர் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியுள்ளனர்.

வன்கொடுமை நடந்த பகுதி.

இந்நிலையில் 55 வயதான நபர் ஒருவன் இந்த பெண்களில் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளான். மற்றொரு பெண் மீது மிக மோசமான பாலியல் தாக்குதலை (Seriously Sexually Assaulted) நடத்தியுள்ளார்.  மேலும் அவர்களிடம் இருந்த நகைகள் மற்றும் மொபைல் போன்களை பறித்துக் கொண்டுள்ளான்.

ALSO READ  ரஷ்யாவில் அவசரநிலை.!!அதிகாரிகளின் அலட்சியத்தால் நதியில் கலந்த 20,000 டன் ஆயில்- கொந்தளித்த புதின்! 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து இந்த குற்றத்தில் ஈடுபட்ட அந்த 55 வயதான நபர் கைது செய்யப்பட்டான்.  அவன்மீது பாலியல் குற்றம், வழிப்பறி உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  மாலத்தீவில் தனிமையில் சிக்கிய தேனிலவு தம்பதிகள்...
File Image.

ஆனால் ஊரடங்கு மீறி வெளியே சுற்றிய குற்றத்திற்காக பெண்கள் இருவருக்கும் தலா 33 பவுண்ட்(£ 33) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதம் ரத்து செய்யப்பட்டது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அரசு ஊழியர்களுக்கு பொதுமன்னிப்பு – தலிபான் அறிவிப்பு

naveen santhakumar

சீனாவை மீண்டும் சீண்டிய டிரம்ப்; கொரோனாவை ‘Kung flu’ என அழைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!.. 

naveen santhakumar

பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள தடை – உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்

Shobika