உலகம்

இரட்டை குழந்தைகளில் ஒன்றுக்கு வேறு தந்தை அதிர்ச்சியில் உறைந்த தந்தை- நடந்தது என்ன ?? 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெய்ஜிங்:-

உலகின் கொரோனா கொடையாளியான சீனாவில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு தந்தை வேறு ஒரு நபர் என்ற அதிர்ச்சி தகவலால் சம்பந்தப்பட்ட குழந்தைகளின் தந்தை கடும் அதிர்ச்சி.

கோப்பு காட்சி.

சீனாவில் பிறப்புகளை பதிவு செய்வதற்கான நடைமுறையின் (Standard Procedure) ஒரு பகுதியாக புதிதாகப் பிறந்த குழந்தைகளை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவது ஒன்று ஆகும்.  

இந்நிலையில் அடையாளம் வெளியிடாத  பெற்றோர்களின் இரட்டை குழந்தைகளின் டி.என்.ஏ வை பரிசோதனை செய்தபோது அதிர்ச்சியூட்டும் ஒன்றை கண்டதாக பெய்ஜிங் ஜாங்ஜெங் தடயவியல் (Beijing Zhongzheng Forensic Identification Center) அடையாள மைய டி.என்.ஏ ஆய்வாளர் டெங் யஜுன் (Deng Yajun) கூறி உள்ளார்.

தனது இரட்டை குழந்தைகளின் சோதனை முடிவுகளைப் பெற்றபோது அந்த நபர் திகைத்துப் போனார். ஏன் என்றால் இரட்டை குழந்தைகளில் ஒன்றின் டின்.என்.ஏ  மாறுபட்டு உள்ளது. அது வேறு தந்தைக்கு பிறந்ததை காட்டுகிறது. இந்த சோதனை முடிவு அவரது மனைவியும் அவரைத் தவிர வேறு ஒருவருடன் உடலுறவு கொண்டார் என்பதைக் குறிக்கிறது.

ALSO READ  கீரிப் பிள்ளைகளின் பாசப்போராட்டம்… 

டி.என்.ஏ அறிக்கையை தயாரித்த ஆய்வாளர் டெங் யஜூன் கூறும் போது:-

இதுபோன்ற சம்பவம் நடக்க வாய்ப்பு 1 கோடியில் (10 Million) ஒன்றுக்கு வாய்ப்பு உள்ளது.  இரட்டை குழந்தைகளை பெற வேண்டும் என்றால் முதலில், தாய் ஒரே மாதத்தில் ஒன்றுக்கு பதிலாக இரண்டு முட்டைகளை உற்பத்தி செய்ய வேண்டும். இரண்டாவதாக, இரண்டு ஆண்களுடன் உடலுறவு கொள்ள வேண்டும்.

இதன் முடிவுகள் குழந்தைகளுக்கு ஒரே தாய் ஆனால் ஒரே தந்தை இல்லை என்பதைக் காட்டுகிறது என்று கூறினார்.

வெவ்வேறு தந்தையர்களுடன் பிறந்த இரட்டையர்கள் மிகவும் அரிதான நிகழ்வாகும், இது ஹீட்டோரோபட்டர்னல் சூப்பர்ஃபெகண்டேஷன் (Heteropaternal Superfecundation) என்று அழைக்கப்படுகிறது.

ALSO READ  அடுத்த அதிரடி: மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை..! விரைவில் Pubg... 

இதே போன்ற ஒரு நிகழ்வு கடந்த வருடம் சீனாவின் ஸியாமென் (Xiamen) நகரில் நடைபெற்றது. இதேபோன்று இரண்டு குழந்தைகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்தபோது குழந்தைகளில் ஒன்று வேறொரு நபருக்கு பிறந்தது சோதனையின் மூலமாக தெரியவந்தது.

இது சாத்தியமற்றது என்று தோன்றலாம், ஆனால் இரட்டையர்கள் வெவ்வேறு தந்தையர்களுடன் பிறப்பது மிகவும் அரிதான நிகழ்வாகும். புதிதாகப் பிறந்த குழந்தையின் டி.என்.ஏ பரிசோதனையை கோரும்போது மட்டுமே வழக்குகள் வெளிச்சத்திற்கு வரும்.

அமெரிக்காவில் 400 இரட்டை பிறப்புகளில் ஒன்று ஹீட்டோரோபட்டர்னல் சூப்பர்ஃபெகண்டேஷன் என்று கூறுகிறது.

ஒரு தாய் மாதத்தில் இரண்டு முட்டைகளை வெளியிடும் போது வெவ்வேறு ஆண்களிடமிருந்து இரண்டு விந்தணுக்களால் கருவுற்றிருக்கும் போது ஹெட்டோரோபட்டர்னல் சூப்பர்ஃபெகண்டேஷன் ஏற்படுகிறது.

மனிதர்களில் ஹீட்டோரோபட்டர்னல் சூப்பர்ஃபெகண்டேஷன் அரிதானது என்றாலும், நாய்கள், பூனைகள், மாடுகள் மற்றும் கொறித்துண்ணிகள் உள்ளிட்ட பிற விலங்குகளில் இது மிகவும் பொதுவானது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

என்னென்ன பண்றாங்க பாருங்க- காதல் ஜோடியின் Atrocity…!

naveen santhakumar

கருந்துளையில் இருந்து முதன் முறையாக வெளிப்பட்ட ஒளி…

naveen santhakumar

சுற்றுலா பயணியை கடித்து துப்பிய சுறா.. கரை ஒதுங்கிய மனித கால்

News Editor