சாதனையாளர்கள் லைஃப் ஸ்டைல்

சில மனிதர்கள்.. சில நினைவுகள்.. பகுதி – 7 (துணையாகி…. தாயாகி)

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தான் பார்த்த, பழகிய,நேசித்த, கற்றுக் கொண்ட, கொண்டாடிய மனிதர்களை அவர்களுடனான தன் நினைவுகளை மூத்த பத்திரிக்கையாளர் எம்.ஜெ. பிரபாகர் பகிர்ந்து கொள்ளும் தொடர் இது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகிலுள்ள தோளூர்பட்டி எனும் கிராமம்.RMK. ராமசாமி- பத்மாவதி ஆகியோரது இரண்டாவது மகள் சித்ரா.அத்தை மகள். பள்ளி விடுமுறை காலங்களில் சிறுவர்களாக இருக்கும்போதே நாங்கள் அவர்கள் வீட்டுக்குப் போவதும் அவர்கள் எங்கள் வீட்டுக்கு வருவதும் வாடிக்கையான ஒரு நிகழ்வு.

ராமசாமி, பத்மாவதி தம்பதி

நாங்கள் அத்தை வீட்டுக்குப் போகும்போது புது துணி எடுத்துக் கொடுப்பது வழக்கம் . அதுபோன்று அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தால் புது துணி எடுத்துக் கொடுப்பதும் நடக்கும். இது மிகவும் சந்தோஷமாகவும் இருக்கும். 1978 ஆண்டு மதுரையில் எனது சித்தப்பா சந்திரசேகர் – அமுதா திருமணம் மதுரையில் மார்ச்சு 9 ஆம் தேதி நடைபெற்றது.

அமுதா, சந்திரன் தம்பதி

இத்திருமணத்திற்கு நானும் சென்றிருந்தேன். சித்ராவும் தனது அக்கா திருமணத்திற்கு வந்திருந்தார்.அன்று முதல் இருவரும் காதலிக்க தொடங்கினோம். எங்களது குடும்பத்தில் உறவுகளில் காதல் என்ற நிலை இல்லாத காலம் அது.

தோழர் பிரபாகர், சித்ரா

அன்றைக்கு எங்களுக்கு இருந்த ஒரே தூதுவர் அஞ்சல் துறை தான். அடிக்கடி அஞ்சல் மூலம் நூல்கள் சித்ராவுக்கு அனுப்பு வேன்.அதை பேக்கிங் செய்யும் அட்டையில் உள் பக்கம் எங்களது எழுத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும் இப்படித்தான் எங்களது அன்பு தொடர்ந்தது.தீக்கதிர் நாளிதழில் நான் பொறுப்பேற்ற பின் தீவிரமாக தொடர்ந்தது எங்களது அன்பு .இது எங்கள் உறவினர் மத்தியில் விவாதிக்கப்பட்டது.

தோழர் பிரபாகர், சித்ரா


1984 ஆம் வருடம் சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு கூட்டம் நடைபெற்றது தோழர் எஸ் ஏ பெருமாள், அக்கா வசந்தா இருவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள சென்றிருந்தார்கள் .நிகழ்வு முடிந்தவுடன் தோளூர்பட்டியிலுள்ள அத்தை வீட்டிற்கு இருவரும் சென்றார்கள். எங்கள் இருவரின் காதல் அலசப்பட்டு திருமணம் தேதி நிச்சயிக்கப்பட்டது.எங்கள் திருமணம் 10.06.1984 தேதியன்று தீக்கதிர் நாளிதழ் ஆசிரியர் கே முத்தையா தலைமையிலும் மேலாளர் சேஷகிரி முன்னிலையிலும் தோளூர்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.

ALSO READ  சில மனிதர்கள் - சில நினைவுகள் பகுதி -10 (வரலாறு)
தோழர் பிரபாகர், சித்ரா

மதுரை தீக்கதிர் நாளிதழ் பின்புறம் உள்ள பகுதியில் எங்களது இல்வாழ்க்கை பயணம் தொடங்கியது. துணைவி சித்ரா நீண்ட அனுபவமிக்க சமையல் கலை நிபுணர் என்றுதான் கூற வேண்டும்.எங்களுக்கு இருவருக்கு மட்டும் அவர் சமைக்கவில்லை கட்சித் தலைவர்கள் மதுரைக்கு வந்தால் தீக்கதிர் அலுவலகத்தில்தான் தங்குவார்கள்.பெரும்பாலும் மதிய உணவு எங்கள் வீட்டில் தான் இருக்கும் .பாசத்திற்குரிய வளர்ப்புத் தந்தை சேஷகிரி நிச்சயம் தினமும் ஒரு வேளையாவது சித்ரா சமைத்த உணவை கண்டிப்பாக சாப்பிடுவார். நான் நிர்வாக மேலாளராக பணியாற்றியபோது தோழர் அப்துல் வகாப் அவரது மருத்துவ சூழல் காரணமாக பிற்பகல் உணவு எங்கள் வீட்டிலேயே இருக்கும்.இதுமட்டுமின்றி உறவினர்கள் பெரும்பாலும் தொடர் வருகையாக இருக்கும்.

தோழர் பிரபாகர், சித்ரா

மதுரை மாநகர் அரசு மருத்துவமனை பிரதானமான ஒன்று. உறவுகளின் மருத்துவ சிகிச்சை பெரும்பாலும் அரசு மருத்துவமனையில் இருக்கும் அதேவேளையில் எங்கள் இல்லத்தில் இருந்து தான் அவர்களுக்கான உணவும் மருத்துவமனைக்குச் செல்லும். சதா உழைப்பாளியாக இருந்தார் துணைவி சித்ரா. இச்சூழலில் எனது பாட்டி விசாலாட்சி அம்மையார் எங்கள் வீட்டில் இருந்து பராமரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் கவனித்துக் கொண்டோம். இதே நிலையில் எனது தந்தையும் ஸ்ட்ரோக் ஏற்பட்டு வலது கை கால் செயல்படாமல் மற்றும் வாய் பேச முடியாத சூழலில் எங்களோடு இருந்து மருத்துவ சிகிச்சை எடுக்கும் சூழலும் ஏற்பட்டது. எங்களது இல்லம் மருத்துவமனை போல ஆகிவிட்டது.இந்தச் சூழலிலும் அவர் தனது தம்பி கமலக்கண்ணன் உடன் இணைந்து டெலிபோன் டெலக்ஸ் மற்றும் ரிசப்ஷனிஸ்ட் படிப்பை ஓராண்டு மேற்கொண்டார்.
1987 ஆண்டு மகன் ராகேஷ் பிறந்தார்.

ALSO READ  குடிப்பதால் பாலியல் வாழ்க்கையில் விளையும் நன்மை... 

அம்மா பாட்டி மாமனார், மகன் ராகேஷ் ஆகியோருக்கு சித்ரா தான் தாயாக இருந்து பராமரித்து வந்தார். குழந்தைகளை வளர்ப்பதில் சித்ராவுக்கு நிகர் அவரே.

சுரேஷ், சத்யா குடும்பம்

சித்ராவின் அக்கா அமுதா சந்திரன் மகன் சுரேஷ் எங்களது மகன் ராகேஷ் சித்ராவின் தங்கை கீதா – முருகன் மகன் முகேஷ் இவர்களது வளர்ப்பில் சித்ராவின் பங்கு பிரதானமானது.

முருகன், கீதா மற்றும் முகேஷ்

இவர்களைத் தொடர்ந்து தாத்தா பி. வி துரைராஜ் (விசாலாட்சி பாட்டியின் தம்பி) இவரையும் பராமரிக்கும் சூழல் எங்களுக்கு ஏற்பட்டது.இப்படி பட்ட சூழலில் கம்ப்யூட்டர் பயிற்சி, தையல் பயிற்சி எடுத்துக் கொண்டார்.கல்லூரி படிப்புடன் ராகேஷ் ஆனந்த விகடனில் மாணவர் பத்திரிகையாளராக இணைந்தார்.சென்னையில் விகடன் பயிற்சியின் போது உடன் பயிற்சிக்கு வந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பத்திரிகையாளர் மாருதி மனோகர் ஆசிரியர் பிரேமா ஆகியோரது மகள் ஹேமா அறிமுகம் கிடைக்கிறது.

மாருதி மனோகர், பிரேமா குடும்பம்

7 ஆண்டுகளாக இவர்களது காதல் தொடர்ந்தது.2013 இல் ராக்கேஷ் ஹேமா திருமணம் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி நடைபெற்றது.

ராக்கேஷ், ஹேமா தம்பதி

திருமணம் முடிந்து இருவரும் சென்னையில் பணியாற்றிக் கொண்டு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார்கள். சென்னை வாழ்க்கையில் நீந்திக் கடப்பது இருவருக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியது. எனவே எங்களது குடும்பம் சென்னைக்கு பயணமானது. கூட்டுக்குடும்பமாக ராகேஷ் ஹேமா வோடு எங்களது பயணம் தொடர்ந்து கொண்டுள்ளது.

ஹேமா ராக்கேஷ் ஆத்மிகா

01.12.2017 பேத்தி ஆத்மிகா பிறந்தார். அதுமுதல் பேத்தியும்,நானும் ராகேஷ் ,ஹேமா ஆகியோர் சித்ராவின் குழந்தைகளாகி விட்டோம்.


பெற்ற மகனை விட பேத்தி யுடன் சித்ரா வாழும் வாழ்க்கை அற்புதமான ஒன்று. பேத்தியை வளர்த்தெடுப்பதில் பெரும் அக்கறையோடு வாழ்ந்து வருகிறார் இந்த பயணம் சிறப்பாக நீண்ட வருடங்கள் தொடரும்.

பேத்தி ஆத்மிகாவுடன் சித்ரா

36 ஆண்டு காதல் வாழ்க்கை பல்வேறு கரடு முரடான பாதைகளில் இனிமையாக பயணித்து வருகிறது. ஆம் இன்று எங்கள் திருமண நாள்…..

தொடரும்….


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தொடங்கியது காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு!!

Shanthi

Hair tattoo பற்றி தெரியுமா?

Admin

சைவப் பிரியர்களுக்கு ‘கே.எஃப்.சி’-யின் குட் நியூஸ்!

naveen santhakumar