இந்தியா

கஞ்சா கிடைக்காத விரக்தியில் கத்தியை விழுங்கிய நபர்; நுரையீரலில் சிக்கிய 20 சென்டிமீட்டர் கத்தி… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

ஹரியானாவை சேர்ந்த 28 வயதான  போதைப் பழக்கத்திற்கு அடிமையான ஒருவர், கஞ்சா எதுவும் கிடைக்காததால் மனஉளைச்சலில் கத்தி ஒன்றை விழுங்கியுள்ளார். 

அதனால் அவருக்கு  பசியின்மை மற்றும் வயிற்று வலி உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒன்றரை மாதமாக அவர் இதனை யாரிடமும் கூறவில்லை. இதையடுத்து உடல்நலக் கோளாறால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 

அங்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது அவரது வயிற்றில் கல்லீரலில் 20 செ.மீ. நீள கத்தி இருந்தது மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் பின்னர்தான் கத்தியை விழுங்கியது குறித்து நோயாளி கூறியுள்ளார். கல்லீரலில் முழுமையாகப் பதிந்திருந்த கத்தியை அகற்ற மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். 3 மணி நேரம் நடந்த சிகிச்சையில் அந்தக் கத்தி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. 

இதுகுறித்து அந்த நபரிடம் கேட்டதற்கு  ஒன்றரை மாதங்களுக்கு முன்பு உணவு உண்ணும்போது கத்தியை சாப்பிடுவது போல் உணர்ந்தேன், அதனை மெல்ல முயன்றேன் ஆனால் முடியவில்லை எனவே தண்ணீர் குடித்து முழுங்கி விட்டேன்” என்று கூறினார். 

ALSO READ  ஊரடங்கால் வருமானமின்றி தவித்த கூலித்தொழிலாளி தற்கொலை....

இது குறித்து மருத்துவர் தாஸ் கூறுகையில்:-

பித்த நாளம், தமனி மற்றும் நரம்புக்கு மிக நெருக்கமாக கத்தி இருந்தது. சிறு தவறு நடந்தாலும் நோயாளி இறந்து விடும் நிலையில் தான் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கல்லீரலில் பதிந்திருந்த கத்தியை அகற்றியதாகவும் தெரிவித்துள்ளனர். முதலில் ரேடியாலஜிஸ்ட் உதவியுடன் நுரையீரல் மற்றும் கல்லீரலில் சிலை அகற்றப்பட்டது அதன் பின்னர் சைக்காலஜிஸ்ட் உதவியோடு அவருக்கு மன ஆலோசனைகள் வழங்கப்பட்டது அதன் பின்னர்தான் அறுவை சிகிச்சை நடைபெற்றது என்று கூறினார்.

ALSO READ  முகக்கவசம் அணியாவிட்டால் ஒரு லட்சம் அபராதம்; வெளியே சுற்றினால் இரண்டு ஆண்டு சிறை- அரசு அதிரடி….

இந்த நபருக்கு மனநோய்க்கு சிகிச்சையளிக்கப்பட்ட வரலாறு உள்ளது மேலும் இவர் கஞ்சா புகைப்பழக்கம் உடையவர் என்றும் கூறினர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிங்கம் பட நடிகர் பெங்களூருவில் கைது…!

News Editor

65.5 கோடி தடுப்பூசிகளை ஆர்டர் செய்ய ஒன்றிய அரசு ஒப்பந்தம்

News Editor

புதுச்சேரியின் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் நியமனம் !

News Editor