சினிமா

பிக்பாஸ்-4 நிகழ்ச்சி ஆரம்பமா??????

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழில் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி 3 சீசன்கள் நிறைவு பெற்றுள்ளன. ஒவ்வொரு சீசனுமே பெரும் ஹிட்டானது.வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தொடங்கும்.

இம்முறை கொரோனா லாக்டவுடன் காரணமாக பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்குவது தாமதமாகி வருகிறது.ஆனால் இந்தி மற்றும் தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தொடங்கிவிட்டனர். இந்தியில் சல்மான் கானும் தெலுங்கில் நாகார்ஜூனாவும் தொகுத்து வழங்குகின்றனர்.

இதற்கான டீசர்(teaser) மற்றும் புரமோ(promo) வீடியோக்கள் அண்மையில் வெளியானது. இந்நிலையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4ஐ தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களாக சில பிரபலங்களின் பட்டியலும் வெளியானது.

ALSO READ  குழந்தைகளின் நலன் குறித்து பேசிய த்ரிஷா:

இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4-ம் கடந்த சீசன்களை போல நடிகர் கமல்ஹாசனே தொடங்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து இதற்கான போட்டோ ஷுட்டில் கமல் பங்கேற்றதாக தாடியுடன் இருக்கும் அவரது புது கெட்டப் போட்டோ ஒன்றும் வைரலானது.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான புரமோவை(promo) நிகழ்ச்சிக்குழு தயார் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஒருசில தினங்களில் முதல் புரமோ வீடியோவும், செப்டம்பர் முதல் வாரத்தில் மற்றொரு வீடியோவும் டெலிகாஸ்ட்(telecast) செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

ALSO READ  ஆஸ்கர் விருதுக்கு செல்லும் சூரரை போற்று!

இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகைகள் கிரண், ரம்யா பாண்டியன், சுனைனா, வித்யூலேகா, சூர்யாதேவி உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. 

ஆனால் இந்த தகவலை நடிகைகள் ரம்யா பாண்டியன் மற்றும் சுனைனா ஆகியோர் மறுத்திருந்தனர். இருப்பினும் விரைவில் மக்களுக்கு செம என்டெர்டெய்ன்மென்ட்(entertainment) காத்திருக்கிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஊடகங்களில் வெளியாகும் செய்தி தவறானது; இயக்குநர் லிங்குசாமி

News Editor

நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி ..!

naveen santhakumar

‘சோழ சாம்ராஜ்யம் மீண்டும் எழுகிறது’ : ’பொன்னியின் செல்வன்’ ரிலீஸ் எப்போது ?

naveen santhakumar