அரசியல்

பாஜக-வில் இணைகிறாரா?????….குஷ்பு…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான குஷ்பு இன்று டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். அவரின் இந்தப் பயணம் பாஜகவில் இணைவதற்காகவே என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான குஷ்பு அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணையவுள்ளார் என்று சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், குஷ்பு தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வந்தார்.

சில தினங்களுக்கு முன்பு பாஜகவில் குஷ்பு இணையவுள்ளார் என்று மீண்டும் செய்திகள் வெளியாகின. அந்தத் தருணத்தில் டெல்லிக்குச் சென்றார் குஷ்பு. அங்கு பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் போதுகூட “2 ரூபாய்க்கு ட்வீட் போடுபவர்களின் கருத்துகளுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது” என்று கடுமையாகச் சாடினார்.இதனிடையே, இன்று (அக்டோபர் 11) மாலை முதலே “நாளை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் குஷ்பு இணைகிறார்” என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், குஷ்பு வீட்டிலேயே இருந்ததால் இந்தத் தகவல் பொய்யானது என்று குறிப்பிட்டார்கள்.

ALSO READ  பாஜகவில் இணைந்தார் ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன்:

இதனிடையே இன்று மாலை கணவர் சுந்தர்.சியுடன் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார் குஷ்பு. அப்போது விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.

பாஜகவில் இணையத்தான் டெல்லி செல்கிறீர்களா???? என்ற கேள்விக்கு “NO COMMENTS” என்று பதிலளித்தார் குஷ்பு. பின்பு எதற்காக டெல்லி செல்கிறீர்கள்???? பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகி வருகிறதே!!! என்ற கேள்விக்குக் கூட “NO COMMENTS” என்று பதிலளித்தார்.

ALSO READ  எந்த வேறுபாடும் இன்றி  என்னை ஆதரிக்கிறார்கள்; சைதை துரைசாமி பேட்டி !

அப்போது, “காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறீர்களா???” என்ற கேள்விக்கு குஷ்பு, “நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வாஜ்பாய் சிலை திறப்பு விழாவில் மோடி பேச்சு

Admin

மு.க.ஸ்டாலின் தலைமையிலான 34 அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு !

News Editor

ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் மு.க ஸ்டாலின் !

News Editor