தமிழகம்

சடலத்துடன் உடலுறவு…..ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த சிறுவன்…..கொலை……

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விழுப்புரம்:

ஓரினச்சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவனை கொலை செய்து சுடுகாட்டில் புதைத்துள்ள சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் தனது மகன் தேவன்ராஜை (13) காணவில்லை என மரக்காணம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிறுவனை தேடி வந்தனர்.

இந்நிலையில் சிறுவனின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் இறுதியாக அதே பகுதியை சேர்ந்த அபினேஷ் என்ற இளைஞரை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்துள்ளது.இதனால் அபினேஷ் வீட்டிற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அபினேஷ் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். பிறகு போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அபினேஷ் திடுக்கிடும் உண்மைகளை கூறியுள்ளார். 

அதன்படி அபினேஷ், தேவன்ராஜை கிளி பிடிக்க அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுவனிடம் பாலியல் அத்துமீறல் செய்துள்ளார். இதற்கு சிறுவன் மறுத்ததால் அவனை மிரட்ட கழுத்தை நெரித்துள்ளார். அதில் சிறுவன் பலியாகியுள்ளனர்.பின்பு சிறுவனின் உடலுடன் உடலுறவு கொண்டு பிறகு உடலை சுடுகாட்டில் புதைத்துள்ளார். மேலும் அபினேஷ் தந்தைக்கும், தேவன்ராஜ் தந்தைக்கும் ஏற்கனவே சீட்டு விளையாடும் போது ஒரு மோதல் இருந்துள்ளது. அதனையும் மனதில் வைத்து கொண்டு அபினேஷ் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

ALSO READ  சசிகலா காரில் அகற்றப்படாத அதிமுக கொடி; காவல்துறை நோட்டீஸ் !

சிறுவனின் உடலை தோண்டி எடுத்த போலீசார் பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ஓராண்டிற்கு முன்பு இதே போல் ஒரு சிறுவனை அபினேஷ் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வைகுண்ட ஏகாதசி.. பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

naveen santhakumar

கனமழை எதிரொலி: 5க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

naveen santhakumar

மதுக் கடைகள் திறப்பு: மது வாங்க 7 வண்ணங்களில் டோக்கன்.. 

naveen santhakumar