இந்தியா

“ரிபப்ளிக்” அர்னாப் கோஸ்வாமி ஜாமீனில் விடுதலை:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு, உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து, சிறைச்சாலையில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான, ‘ரிபப்ளிக்’ சேனலின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை, கட்டிட உள்ளரங்கு வடிவமைப்பாளரின் தற்கொலை வழக்கில், சமீபத்தில் கைது செய்தது, ராய்காட் மாவட்டத்தின் அலிபாக் காவல்துறை. இந்தக் கைது சம்பவம் தேசிய அளவில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட அர்னாப், தனக்கு ஜாமீன் வழங்கவேண்டி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவருடன் கைது செய்யப்பட்ட நிதிஷ் ஷர்தா, பெரோஸ்சேக் ஆகியோரும் ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.அவர்களது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய, உயர்நீதிமன்றம், கீழ் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது. 

ALSO READ  டெல்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல, பயங்கரவாதிகள்; மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா !

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அர்னாப் கோஸ்வாமிக்கு இன்று மாலை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், தற்போது மும்பை சிறைச்சாலையில் இருந்து அர்னாப் கோஸ்வாமி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Pin Up Apostas Em Esportes On The Internet Brasil Pin Up Be

Shobika

கொரோனா பரவல்; திமுக சார்பில் கபசுர குடிநீர் !

News Editor

அசாம், மேற்கு வங்கம் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம் !

News Editor