சினிமா

நடிகர் திலகத்தை கிண்டல் செய்யும் வகையில் எபிசோட்….கலக்கப் போவது யாரு நிகழ்ச்சிக்கு கண்டனம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

காமெடி மற்றும் மிமிக்ரியை அடிப்படையாக வைத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் கலக்கப் போவது யாரு. இந்த நிகழ்ச்சியில் இருந்து பலர் சினிமா நட்சத்திரங்களாகி உள்ளனர். 

ஏற்கெனவே லட்சுமி ராமகிருஷ்ணனை கடுமையாக கிண்டல் செய்த இந்த நிகழ்ச்சி கடும் கண்டனத்தை சந்தித்தது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பு பற்றியும், அவரது வசன உச்சரிப்பு, முகபாவங்கள் பற்றியும் கிண்டல் செய்து ஒரு எபிசோட் ஒளிபரப்பானது.

ALSO READ  கே.ஜி.எஃப் இயக்குனர், பாகுபலி நடிகர் கூட்டணியில் உருவாகும் படம் பூஜையுடன் துவக்கம்..! 

இந்த எபிசோட் வைரலானதோடு சிவாஜி குடும்பத்தை அதிர்ச்சி அடைய செய்தது. நடிகர் பிரபு, விஜய் டி.வி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தனது கண்டனத்தை தெரிவித்தார். அதேபோல சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் அதன் தலைவர் சந்திரசேகரன் கண்டன அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து இதற்காக வருத்தம் தெரிவித்துள்ள விஜய் டி.வி. இனி இதுபோன்று நடக்காது என்றும் உத்தரவாதம் அளித்தது. இந்த நிகழ்ச்சியை இணையத்தில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுப்பதாக நிர்வாகம் கூறியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குடியுரிமைப் பற்றி பேச மறுத்த நடிகர் அமீர்கான்

Admin

ஹீரோவில் இருந்து தாதாவாக மாறும் சந்தானம்

Admin

சீனாவில் ஹன்ஷிகா – ஒரு ஆச்சரிய தகவல்!

naveen santhakumar