சினிமா

ஹீரோவில் இருந்து தாதாவாக மாறும் சந்தானம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காமெடியில் வடிவேலுவுக்கு அடுத்து அவரது இடத்திற்கு வந்தவர் தான் சந்தானம். ஆனால் இதற்குபிறகு ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என கூறி நடித்து சில படங்களில் வெற்றியும் கண்டுள்ளார்.

அதை தொடர்ந்து ஜான்சன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து சென்ற வருடம் வெளியான படம் ‘ஏ1’. இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.

இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகளும், வசனங்களும், பாடல்களும் சந்தானத்தின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் கவர்ந்தன.

ALSO READ  திரையில் நேரடியாக மோதும் 'தல தளபதி' படங்கள்..!கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

சந்தானம் படங்களின் வசூலில் சாதனையாக இந்த படம் அமைந்தது. சந்தானம் – ஜான்சன்.கே – சந்தோஷ் நாராயணன் வெற்றி கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரியவுள்ளது. லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக கே.குமார் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளார்.

தற்போது இந்தக் கூட்டணியில் ஒளிப்பதிவாளராக ஆர்தர் கே.வில்சன் இணைந்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் தாதா வேடத்தில் நடிக்கிறார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கதாநாயகியாக அறிமுகமாகும் சாய் பல்லவியின் தங்கை !

News Editor

ஜெயம் ரவியுடன் கைகோர்க்க போகும் பிரியா பவானி ஷங்கர் :

Shobika

‘ஜகமே தந்திரம்’ படம் குறித்து நடிகர் தனுஷ் கருத்து !

News Editor