அரசியல்

வேளான் சட்டங்களை எதிர்த்ததால் பாஜகவில் இணைந்தேன் : மக்கள் நீதி மையம் பொது செயலாளர் 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மக்கள் நீதி மையம் பொது செயலாளர் அருணாசலம் இன்று அமைச்சர் பிரகாஷ் ஜவுடேகர் முன்னிலையில்  பாஜகவில் இணைந்தார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மத்திய சுற்றுச்சுழல் துறை, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளரான அருணாச்சலம். இந்த நிகழ்வின் போது, பா.ஜ.க.வின் மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அருணாச்சலம், “புதிய வேளாண் சட்டங்களை மக்கள் நீதி மய்யம் ஆதரிக்காததால் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தேன். புதிய வேளாண் சட்டங்களை ஆதரிக்க கேட்டபோது கமல் உள்ளிட்ட நிர்வாகிகள் அதற்கு எதிராக முடிவெடுத்தனர்.

ALSO READ  பா.ஜ.க-வில் இணைகிறாரா நடிகை விஜயசாந்தி?????

விவசாயிகள் நலன் கருதி பாஜகவில் இணைந்தேன். தொலைநோக்கு சிந்தனையுடன் மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இன்னும் ஓரிரு நாட்கள் தான்… விவசாயிகளுக்கு முதல்வர் சொன்ன குட்நியூஸ்

naveen santhakumar

திமுக 2 ஏக்கர் நிலம் தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டது ; ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு !

News Editor

போராட்டம் வெடிக்கும்… மத்திய அரசை எச்சரித்த முத்தரசன்!

naveen santhakumar