அரசியல்

பா.ஜ.க-வில் இணைகிறாரா நடிகை விஜயசாந்தி?????

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹைதராபாத்:

தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் விஜயசாந்தி. இவர் ரஜினிகாந்த் உள்பட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

இவர் 1998-ம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்தார். அப்போது அவருக்கு மகளிர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் பா.ஜ.க-வில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார்.அந்த கட்சியானது மக்களிடம் போதிய ஆதரவு பெறவில்லை.எனவே, 2009-ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் இணைந்தார்.

ALSO READ  தமிழக பா.ஜ .க தலைவர் அண்ணாமலையின் பரபரப்பு அறிக்கை...

அந்த கட்சி சார்பில் மக்களவை MP-யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.பின்னர்  கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2011-ல் MP பதவியை ராஜினாமா செய்ததையடுத்து 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

பின்னர் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்காததால் அக்கட்சியில் இருந்து விஜயசாந்தி இன்று விலகிவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர் நாளை பாஜகவில் மீண்டும் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ALSO READ  முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோன தொற்று !

இதற்காக நடிகை விஜயசாந்தி நாளை டெல்லி செல்ல இருப்பதாகவும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் நாளை அவர் பா.ஜ.க-வில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழக பா.ஜ .க தலைவர் அண்ணாமலையின் பரபரப்பு அறிக்கை…

News Editor

சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரி சட்டப்பேரவை வாயில் அமர்ந்து தமிமுன் அன்சாரி தர்ணா……

naveen santhakumar

சபாநாயகரின் கண் அசைவிற்கு கட்டுப்படுவோம்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு 

News Editor