சினிமா

மீண்டும் கே.எஸ்.ரவிகுமாரிடம் கதை கேட்ட ரஜினி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மலையாள சினிமாவில் கடந்த ஆண்டு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன். இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.

அதானல் இப்படத்தினை பல மொழிகளில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர். அந்தவகையில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இதன் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றி தயாரிக்கும் இப்படத்திற்கு கூகுள் குட்டப்பன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர்கள் சபரி மற்றும் சரவணன் இணைத்து இயக்கம் இப்படம் சென்னையில் இன்று பூஜையுடன் துவங்கப்பட்டது. அப்போது பேசிய கே.எஸ் ரவிக்குமாரிடம் ரஜினியுடன் மீண்டும் எப்போது படம் பண்ணுவீர்கள் என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த கே.எஸ்,”மாதம் ஒருமுறை ரஜினியுடன் தொடர்ச்சியாக நட்பு ரீதியாக பேசி வருகிறேன். சமீபத்தில் ‘ராணா’ படத்தின் கதையை மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள் என்று கேட்டார். நானும் சென்று சொல்லிவிட்டு வந்தேன். மிகவும் நல்ல கதை என்று பாராட்டிவிட்டு இப்போது இருக்கும் உடல்நிலையில் என்னால் அதை செய்ய முடியாது. விரைவில் செய்யலாம் என்று ரஜினி சொல்லி இருக்கிறார்” என தெரிவித்தார். 


Share
ALSO READ  மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வலிமை டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா..? தல ரசிகர்களுக்கு உற்சாகமாக்கும் தகவல்…!

News Editor

விஜய் 65 படத்தை தயாரிக்கிறதா…! சன் பிச்சர்ஸ்  

News Editor

‘களத்தில் சந்திப்போம்’ வெளியிட்டு தேதியில் மாற்றம் படக்குழு அறிவிப்பு!

News Editor