சினிமா

வலிமை டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா..? தல ரசிகர்களுக்கு உற்சாகமாக்கும் தகவல்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உள்ள அஜித்-ஹெச்.வினோத் கூட்டணியின் வலிமை படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ட்விட்டரில் ட்ரெண்டாகும் 'வலிமை டீசர்' ஹேஸ்டாக்! - Idam Porul

‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு எச். வினோத் – அஜித் – போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்திற்காக மீண்டும் இணைந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்க, வில்லனாகத் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பானது, கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டங்களாகத் தடைப்பட்டது. எனினும், கடும் நெருக்கடிகளுக்கு இடையே மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது.

ALSO READ  'FIR' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் :

இந்நிலையில் வலிமை படத்தின் டீசர் எப்போது ரிலீசாகும் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக வலிமை படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாக வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும், இந்த நிலையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தல தீபாவளி என குறிப்பிட்டு இருப்பது மட்டுமல்லாமல் வெகுவிரைவில் டீசர் எனவும் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பதிவு ரசிகர்களிடையே தீயாக பரவி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆதித்ய வர்மா படத்தில் விக்ரம் நடித்தாரா… !

Admin

கையை மீறிய கொரோனா பாதிப்பு; 1 கோடி ரூபாய் நிதியளித்த பிரபல நடிகர் 

News Editor

‘ஜகமே தந்திரம்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

News Editor