சினிமா

மிரட்டும் காடன்; டிரைலர் வெளியிட்ட படக்குழு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் பிரபு சாலமன் தமிழில் மைனா, சட்டை, கும்கி போன்ற வெற்றிப்படங்களை இயக்கியதன் மூலம் தமிழில் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார். இவரின்  இயக்கத்தில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான “தொடரி” திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. 


அதனையடுத்து நடிகர் ராணா நடிப்பில் “காடன்” என்ற படத்தினை உருவாக்கி வருகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சோயா ஹுசைன், புல்கிட் சாம்ராட், விஷ்ணு விஷால், அஸ்வின் ராஜா உள்ளிட்டோர்கள் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மூன்று மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தினை ஈரோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 


அதனையடுத்து படத்தின் படப்பிடிப்பு இந்திய முழுவதும் உள்ள காடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. “காடன்” திரைப்படம் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதியே வெளியாக இருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் வெளியிட்டு தள்ளிப்போனது. தற்போது கொரோனா பரவல் தாக்கம் குறைந்துள்ளதால் காடன் படத்தினை வரும் ஏப்ரல்  2 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.

ALSO READ  கால்வாய்க்குள் கவிழ்ந்த பேருந்து; அதிகரிக்கும் உயர் பலி..!

இந்நிலையில் படத்தின் சிறு முன்னோட்டமாக “காடன்” படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளது படக்குழு. அதிரடி மற்றும் விறுவிறுப்பு கலந்த இந்த டிரைலர் தற்போது ரசிகர்களால் இணையத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. 

#prabusolomon #raanadaggubati #tamilthisai #tamilmovie #tamilcinema #vishnuvishal #kaadan #tamilmovie


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆப்பிள் கீபோர்டு மோசம்…. உண்மையை சொன்ன பிரபல ஹாலிவுட் இயக்குனர்

Admin

தல அஜித் Update – 3வது முறையாக எச்.வினோத், போனிகபூருடன் இணையும் அஜித்?

naveen santhakumar

டுவிட்டரில் ட்ரெண்டாகும் #2YrsOfRajiniMakkalMandram

Admin