சினிமா

நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.ராமசந்திரன் மறைவு…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.ஆர் என்கிற ஜி.ராமச்சந்திரன் (73) உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். 

கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா, ரஜினி நடித்த ராஜாதி ராஜா, நாட்டுப்புற பாட்டு, எட்டுபட்டி ராசா, வீர தாலாட்டு, மனுநீதி போன்ற படங்களில் நடித்து பிரபலமான இவர்.ஜி.ஆர். கோல்டு பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி மனுநீதி, சவுண்டு பார்ட்டி, காசு இருக்கணும், காதலி காணவில்லை, எங்க ராசி நல்ல ராசி உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளார். கன்னட படங்களையும் இவர் தயாரித்து நடித்துள்ளார்.

ALSO READ  புதுவை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி காலமானார்!

ஜி.ஆர்-க்கு சிவகுமார், சாமி குமார் என்கிற இரு மகன்கள் உள்ளனர். ஜி.ராமசந்திரன் மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் அவரது மனைவியும் தயாரிப்பாளருமான ஆர்.பி. பூரணி மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

செல்வராகவன் குறித்து சாணிக் காயிதம் படத்தின் இயக்குநர் கருத்து !

News Editor

விஜய்யை சந்தித்த பிரபல தெலுங்கு விநியோகஸ்தர் !

News Editor

இது ‘வேற மாறி’ தல- தலயின் Jeep Ride

naveen santhakumar