சினிமா

விஜய்யை சந்தித்த பிரபல தெலுங்கு விநியோகஸ்தர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிய திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்கில் வெளியாகி பல்வேறு வசூல் சாதனைகளை படைத்தது வருகிறது. மாஸ்டர் திரைப்படம்  தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், ‘மாஸ்டர்’ படத்தின் தெலுங்கு உரிமையைக் கைப்பற்றிய விநியோகஸ்தர் மகேஷ் கொனேரு, நடிகர் விஜய்யை நேற்று சந்தித்தார். படத்தின் தெலுங்கு வெளியீட்டிற்கு நல்ல லாபம் கிடைத்ததைத் தொடர்ந்து, இந்த சந்திப்பு நடந்துள்ளது. இது தொடர்பாக அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில்,”ஈஸ்ட் கோஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் குழு, ‘மாஸ்டர்’ தெலுங்கு பதிப்பின் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் சார்பாக நடிகர் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்தேன். தெலுங்கு மாநிலத் திரைப்பட ரசிகர்களால் காட்டப்பட்டுள்ள அன்பைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த விஜய் அவர்கள், தெலுங்கு ரசிகர்களுக்கு தன் நன்றியைத் தெரிவித்தார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  இந்த நூற்றாண்டின் மறக்க முடியாத நிகழ்வான “புல்வாமா தாக்குதல்”

இதனிடையே விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது. 

#master #thalapathy #vijay #mastervijay #thalapathivijay #tamilmovie #tamilthisai #vijaymovie


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விஜய் பற்றி ஒரு வார்த்தை: ட்விட்டரில் ஷாருக்கான் அளித்த பதில் …!

News Editor

சசிகுமாரின் “பகைவனுக்கு அருள்வாய்” திரைப்படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

News Editor

அதிர்ச்சி… பிரபல நடிகைக்கு கொரோனா தொற்றா?… அவரே போட்ட பதிவால் பரபரப்பு!

naveen santhakumar