உலகம்

நன்கொடைகளை வாரி வழங்கும் அமேசான் நிறுவனரின் முன்னாள் மனைவி :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:

உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் நிறுவனரும் உலகப் பணக்காரர்களில் ஒருவருமான ஜெப் பெசோசின் மனைவி மெக்கன்சி ஸ்காட். இவர்கள் இருவரும் கடந்த 2019-ம் ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அப்போது அமேசான் நிறுவனத்தின் 4 சதவீத பங்குகளை தனது மனைவி மெக்கன்சிக்கு ஜெப் பெசோஸ் ஜீவனாம்சமாக வழங்கினார். இதன் மூலம் மெக்கன்சி ஸ்காட் உலகின் பெரும் பணக்கார பெண்களில் ஒருவராக மாறினார்.

ALSO READ  கொரோனா தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்ஸ்..!

மெக்கன்சியின் தற்போதைய சொத்து மதிப்பு 59.5 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதன் மூலம் அவர் உலகின் 22-வது பணக்காரராகவும், உலக அளவில் பெண்களில் 3-வது பணக்காரராகவும் விளங்குகிறார்.அதே வேளையில் மெக்கன்சி ஸ்காட்அறக்கட்டளைகளுக்கு நன்கொடை அளிப்பதில் வள்ளலாக திகழ்கிறார்.

ஏற்கனவே அவர் கடந்த ஆண்டு ஜூலை-நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் பல்வேறு அறைக்கட்டளைகளுக்கு 5 பில்லியன் டாலருக்கும் அதிகமாக நன்கொடை வழங்கினார். இந்நிலையில் தற்போது அவர் மேலும் 2.7 பில்லியன் டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

ALSO READ  உலகப் புகழ்பெற்ற டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் தொடரை இயக்கிய Gene Deitchகாலமானார்...

இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் நெடுங்காலமாக பணமே கிடைக்காத, கவனிக்கப்படாத மக்களுக்கு இந்த பணத்தை அளிப்பதாகவும், இந்தப் பணத்தைப் பயன்படுத்த இன சமத்துவம், கலை மற்றும் கல்வி ஆகியவற்றில் பணிபுரியும் 286 அறக்கட்டளைகளை தேர்வு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

லண்டனிலிருந்து பெற்றோருக்கு வீடியோ கால் செய்து பேசிய இளைஞர்… மறுநாளே மரணம்…

naveen santhakumar

நவாஸ் ஷெரீப்பை பாகிஸ்தான் கொண்டுவர தீவிர ஏற்பாடு:

naveen santhakumar

செம ஐடியா! எரிமலை சாம்பல் வைத்து செங்கற்கள் தயாரிப்பு

Admin