சினிமா

தலைவி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியீடு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர்.ஆக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ALSO READ  கே.வி.ஆனந்த் நேற்று வரை என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்; நடிகர் சிம்பு !

இந்நிலையில், ‘தலைவி’ படத்தின் தமிழ் பதிப்பிற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. விரைவில் தெலுங்கு மற்றும் இந்தி பதிப்பின் சென்சார் தகவல்கள் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.’விப்ரி’ நிறுவனம் சார்பில் விஷ்ணு இந்தூரி இப்படத்தை தயாரித்துள்ளார். விஜேந்திர பிரசாத் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாநாடு முக்கிய அப்டேட்? யுவன்ஷஙகர் ராஜா டுவிட்…! 

naveen santhakumar

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜா குடும்பத்தில் அடுத்த அதிர்ச்சி: நடிகர் துருவாவுக்கும், மனைவிக்கும் கொரோனா… 

naveen santhakumar

ஹரிஷ் கல்யாண் புதிய படத்தின் பாடல் வெளியீடு

Admin