தமிழகம்

தமிழகம் அரசு நகர பேருந்துகளில் பயணிக்க ‘தனி டிக்கெட்’..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகம் முழுவதும் அரசு டவுன் பஸ்களில் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுடன் வரும் உதவியாளர்கள் இலவசமாக பயணிக்க தனி டிக்கெட் வழங்கப்படுகிறது.

Women who traveled for free on buses || பஸ்களில் இலவசமாக பயணம் செய்த பெண்கள்

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் அரசு நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்ற உத்தரவை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுடன் வரும் உதவியாளர் ஆகியோரும் கட்டணமின்றி பயணிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த இலவச பயணம் நடைமுறைக்கு வந்துள்ளது.

ALSO READ  ஓடும் பேருந்தில் மயங்கி சரிந்த டிரைவரை காப்பாற்றிய காவல் ஆய்வாளர்

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒன்றரை மாதத்திற்கும் மேலாக பஸ் போக்குவரத்து இல்லாமல் இருந்த பேருந்து போக்குவரத்து தற்போது அனைத்து ஊர்களிலும் தொடங்கியுள்ளது.

இதனால், பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுடன் வரும் உதவியாளர்கள் கட்டணமின்றி இலவசமாக பயணிக்க தனி டிக்கெட்டை போக்குவரத்து கழகம் அச்சிட்டு, கண்டக்டர்களிடம் வழங்கியுள்ளது.

நகர பகுதியில் அரசு டவுன் பஸ்களில் ஏறும் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகள் உதவியாளர்களுக்கு கட்டணமில்லா பயணத்திற்கான டிக்கெட்டுகளை வழங்குகின்றனர்.

ALSO READ  கொடுத்த கடனை திருப்பி கேட்டு மகளிர் சுயஉதவி குழுவினரை தொந்தரவு செய்யக்கூடாது- ஆட்சியர் அதிரடி…!

அந்த டிக்கெட்டுகளில், திருநங்கையை குறிப்பிடும் வகையில் திந எனவும், மாற்றுத்திறனாளியை குறிப்பிடும் வகையில் மா எனவும், மாற்றுத்திறாளியின் உதவியாளர் என்பதை குறிப்பிட மாஉ என அச்சிடப்பட்டுள்ளது.

மகளிர், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத் திறனாளிகளின் உதவியாளர்கள், மூன்றாம்  பாலினத்தவர்களுக்கான பயணச்சீட்டு வெளியீடு..!! - Tamil News | Tamil Online  News ...

மேலும், அத்துடன் கட்டணமில்லா பயணச்சீட்டு என்றும், மாற்றதக்கதல்ல, கேட்கும் பொழுது காண்பிக்க அல்லது கொடுக்கப்பட வேண்டும், பரிசோதனைக்க உட்பட்டது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அண்ணா பல்கலை.; துணைவேந்தர் சூரப்பா காலத்தில் முறைகேடு நடந்தது உண்மை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

naveen santhakumar

பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் – சுகாதாரத்தறை வெளியீடு

News Editor

மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு நடத்துவதற்கான விதிமுறைகள் வெளியீடு..!

Admin