லைஃப் ஸ்டைல்

பெண்களுக்கு இன்னல்களை தரும் இறுக்கமான பிரா :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெண்கள் இறுக்கமான பிரா அணிவதனால் பல்வேறுவிதமான உடல்சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது. சரியான அளவுகொண்ட பிராவை தேர்வு செய்து அணிவது உடல் தோற்றத்துக்கு மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் பொருத்தமாக அமையும். இறுக்கமான பிராக்களை அணிவது ரத்த ஓட்டத்தை பாதிப்பதோடு, நிணநீர் திசுக்களையும் தாக்கும். இறுக்கமான பிரா அணிவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் என்னென்ன தெரியுமா..???

Tight Bra: Signs of Tight Bra, Ways to Fix Tight Bras, and More

ஆக்சிஜன் பற்றாக்குறை: இறுக்கமான பிரா அணிவது ஆக்சிஜன் பற்றாக் குறைக்கும் வழிவகுக்கும். அதாவது மார்பக பகுதியில் போதுமான அளவு ஆக்சிஜன் உட்செல்ல முடியாமல் தடுக்கப்படும் நிலை உருவாகும். அடிப்பகுதியில் மெல்லிய கம்பிகள், இழைகள் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் பிராக்களை அணியும்போது அவை இறுக்கமாக இருந்தால் பாதிப்பு அதிகமாகும். மார்பக பகுதியில் வடுக்கள் ஏற்படலாம். நுரையீரல் திசுக்கள் சேதமடையவும் கூடும். இவையும் புற்றுநோய் உருவாகுவதற்கான சூழலை அதிகப்படுத்திவிடும்.

சரும சேதம்: மார்பக பகுதியில் சிவந்து போகுதல், கீறல் போன்ற தழும்புகள் தென்பட்டால் அணியும் பிரா மிகவும் இறுக்கமாக இருப்பதை அறிந்து கொள்ளலாம். இறுக்கமான பிரா மார்பக சருமத்தை பலவிதங்களில் பாதிக்கிறது.

ALSO READ  மதுப்பழக்கம் உள்ளவரா நீங்கள்????? அப்போ இது உங்களுக்குத்தான்….
Reasons Why You Should Dump Your Tight Bra Right Away - Clovia Blog

நிணநீர் பாதிப்பு: இறுக்கமான பிராக்கள் மார்பகத்தின் ஆரோக் கியத்தை பெரிதும் பாதிக்கும். மார்பகங்களில் இருந்து நச்சுகள் மற்றும் பிற கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதுதான் நிணநீரின் இயல்பான செயல்பாடாகும். ஆனால் இறுக்கமான பிராக்கள் நிணநீர் திரவங்களின் ஓட்டத்தை குறைப்பதோடு மார்பகங்களில் நச்சுக்களை உருவாக்கவும் செய்யும். இதனால் மார்பக புற்றுநோய் ஏற்படலாம்.

மார்பக அழுத்தம்: இறுக்கமான பிராவை அணிவது மார்பக பகுதியில் தேவையற்ற அழுத்தத்தை கொடுக்கும். அது மார்பக திசு செல்களுக்கு சேதத்தை விளைவிக்கும். அதனால் பிரா தேர்வில் அலட்சியம் கொள்ளக்கூடாது. மார்பகத்திற்கு ஏற்றதாக சரியான அளவில் மட்டுமே அணியவேண்டும்.

ALSO READ  தமிழில் அர்ச்சனை….அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்….!!!!
How to check if you're wearing the wrong bra size | Miss Mary of Sweden

இறுக்கமான பிராவை நாள் முழுவதும் அணிவது உடலுக்கு அசவு கரியத்தை ஏற்படுத்தும். அன்றாட நடவடிக்கைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். உடற்பயிற்சி செய்பவர்கள் பொருத்தமான பிராவை தேர்ந்தெடுக்காவிட்டால் நீண்ட கால பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். உங்களுக்கு தொடர்ச்சியாக நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் நீங்கள் அணியும் பிரா இறுக்கமாக இருக்கிறதா என்றும் பாருங்கள்.

கழுத்து புண்: மிகவும் இறுக்கமான பிராவை அணிவது, தசைகளுக்கு கூடுதல் இறுக்கத்தை ஏற்படுத்துவதால், கழுத்து மற்றும் முதுகு வலி தோன்றக்கூடும். இறுக்கமான பிராக்கள் தோள்பட்டை வலியையும் உண்டாக்கும். அதனால் நெஞ்சை நிமிர்த்தி இயல்பாக நடக்க முடியாத சூழலும் ஏற்படலாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரு நாளைக்கு 3 ஜிபி ஜியோவின் புதிய ப்ளான்… 

naveen santhakumar

IRCTC இணையதளத்தில் ரயில் முன்பதிவு இறுதி நிலவரம் அறியலாம்: புதிய வசதி அறிமுகம்

Admin

மதுபானம் ஏன் குடிக்க கூடாது?

Admin