சினிமா

நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி ..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வீட்டில் உடற்பயிற்சி செய்யும் போது தவறி விழுந்து ஏற்பட்ட காயத்தால் நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

actor Karthik admitted to hospital || பிரபல நடிகர் கார்த்திக்  ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழ் திரையுலகில் இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமாகி 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக்.

தற்போது குணசித்திர வேடங்களிலும், வில்லனாகவும் நடித்து வருகிறார். தீ அவன், அந்தகன் ஆகியப் படங்கள் தற்போது கார்த்திக்கின் கைவசம் உள்ளன.

ALSO READ  தமிழ் இசைக்கு தேசிய அளவில் அங்கீகாரம்; இமான் மகிழ்ச்சி !

சென்னை போயஸ் கார்டனில் வசிக்கும் கார்த்திக், வீட்டில் உடற்பயிற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு காலில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது.

வலியால் துடித்தார். உடனடியாக அவரை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அதே இடத்தில் மீண்டும் அடிபட்டதால் எலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து டாக்டர்கள் கார்த்திக்குக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

ALSO READ  யாருமே எதிர்பார்க்கவில்லை இப்படி ஒரு புரட்சி நடக்கும் என்று; பி.சி.ஸ்ரீராம் கருத்து..!

கார்த்திக்கிற்கு அடிப்பட்ட செய்தி கேட்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி!…

naveen santhakumar

தனுஷ் பட நடிகர் கொரோனாவால் உயிரிழப்பு !

News Editor

2020 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே ஜான்விக்கு குவியும் பாராட்டு மழை

Admin