சினிமா

கூகுள் குட்டப்பா- பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு சூர்யா உதவி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா. இவர் தற்போது ’ப்ரெண்ட்ஸ்’ உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று ’கூகுள் குட்டப்பா’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லாஸ்லியாவின் படத்தை நடிகர் சூர்யா புரமோஷன் செய்து உதவி செய்திருப்பதை அடுத்து படக்குழுவினர் அவருக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

ALSO READ  மாஸ் காட்டும் 'விக்ரம்' படத்தின் பர்ஸ்ட் லுக் :
Surya released first look of losliya in Google Kuttappa - தமிழ் News -  IndiaGlitz.com

அதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமான தர்ஷன் நாயகனாகவும், லாஸ்லியா நாயகியாகவும் நடிக்கும் இந்த படத்தில் எல்லாம் கேஎஸ் ரவிக்குமார், யோகி பாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர். கேஎஸ் ரவிக்குமாரின் உதவியாளர்களான சபரி மற்றும் சரவணன் இயக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காதல் தோல்வி….ஆண்களை வெறுக்கும் நித்யாமேனன்….

naveen santhakumar

முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு; ருத்ரன் படக்குழு கொடுத்த அப்டேட் !

News Editor

அதுல்யாவின் இந்த படங்களுக்கு அள்ளும் லைக்ஸ்

News Editor