தமிழகம்

வரி விலக்கு கேட்ட மூன்றாவது நடிகர் மனு தள்ளுபடி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரிய நடிகர் சூர்யாவின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Hero Surya - Covid Positive: హీరో సూర్యకు కరోనా పాజిటివ్

கடந்த 2010ம் ஆண்டில் நடிகர் சூர்யாவின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்தசோதனைக்கு பிறகு, 2007- 08, 2008-09 நிதியாண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இடைப்பட்ட ஆண்டுகளுக்கான வட்டியையும் செலுத்த வேண்டும் எனவும் வருமான வரித்துறை கூறியது.

ALSO READ  'சூர்யா 40' படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்..!


இதனை எதிர்த்து சூர்யா தரப்பில் தீர்ப்பாயத்தில் சூர்யா தாக்கல் செய்த முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.


இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சூர்யா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வருமான வரி நிர்ணயம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் வருமான வரித்துறை மேல்முறையீடு தீர்ப்பாயம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு முடிவு செய்தால், அதற்கான வட்டி செலுத்துவதில் தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.

வருமான வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியதாவது:

ALSO READ  "சூர்யா 40" படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம் !

வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூர்யா முழு ஒத்துழைப்பு தராத காரணத்தால் வட்டி விலக்கு பெற உரிமையில்லை என தெரிவிக்கப்பட்டது.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியன் சூர்யா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ஏற்கனவே, நடிகர்கள் விஜய், தனுஷ் சொகுசு காருக்கு வரி விலக்கு கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அஞ்சலக தேர்வு இனி தமிழில் எழுதலாம் !

News Editor

எச்சரிக்கையை மீறி போராட்டம்; 150 மாணவர்கள் கைது!

naveen santhakumar

கையை  மீறிய கொரோனா தொற்று; இரண்டாவது முறையாக கோவைக்கு செல்லும் முதல்வர் !

News Editor