தமிழகம்

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 2022ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படுவதால் 16லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். கடும் நெருக்கடியான சூழல் இருப்பினும் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

சத்துணவு சமையல் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்தப்படும்.அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருப்பதால் மாணவர்கள்-ஆசிரியர்கள் விகிதாச்சாரம் இணையாக இருப்பதற்காக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

ALSO READ  பேரறிவாளன் விடுதலை மூலம் நிலைநாட்டப்பட மாநில உரிமை! - முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து..

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காலம், பணி நீக்க காலம் வேலைநாட்களாக கருதப்படும் என அறிவித்துள்ளார். பட்ஜெட்டில் ஏப்ரல் முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என கூறப்பட்ட நிலையில் ஜனவரியிலே வழங்க விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. -சா.கற்பகவிக்னேஷ்வரன்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் கிராமங்களிலிருந்து வருவார்கள் – ராகுல் டிராவிட்.

naveen santhakumar

தமிழகத்திற்கு மஞ்சள் அலார்ட்….வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..

naveen santhakumar

நில அளவீட்டு கட்டணத்தை 40 மடங்கு உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு!… 

naveen santhakumar