உலகம்

விண்வெளி சுற்றுலா; ஸ்பேஸ் எக்ஸ் கவுண்டவுன் ஸ்டார்ட்..!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:-

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ராக்கெட் மூலம் 4 பேரை விண்வெளிக்கு சுற்றுலாவுக்கு அனுப்ப தயாராகி வருகிறது. இதற்கான கவுண்டவுன் வரும் 15ம் தேதி ஸ்டார்ட் ஆகிறது.

SpaceX's Inspiration4 private orbital mission: Live updates | Space

தற்போது விண்வெளி சுற்றுலாத் தொழில் உலகளவில் பிரபலமடைய தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கின் ராக்கெட் மூலம் ஷிப்ட் 4 பேமன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜாரிட் ஐசக் மேன் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் இந்த வாரம் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

ALSO READ  போதும்… போதும்… வாங்க பூமிய காப்பாத்துவோம் - இங்கிலாந்து இளவரசர் வில்லியம்
SpaceX Inspiration4 Crew Arrives To NASA Kennedy Space Center Ahead Of

இந்த பயணத்திற்கான கவுண்டவுன் வருகின்ற புதன்கிழமை (செப்.15) தொடங்கவுள்ள நிலையில், இன்ஸ்பிரேஷன் – 4 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கலம் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் என்.9 என்ற ராக்கெட் மூலம் விண்ணுக்கு செல்ல தயாராகி வருகிறது.

இந்த விண்கலம், மணிக்கு 27,300 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியை முழுவதுமாக சுற்றிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 நாட்கள் விண்வெளி பயணத்திற்கு பிறகு அட்லாண்டிக் கடலில் பயணம் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  இப்படியும் ஒரு மருத்துவரா...!!!!!!!மருத்துவர் செய்த செயலால் பல ஆண்டுகள் தண்டனை :

இதன் மூலம் விண்வெளிக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட முதல் பொதுமக்கள் என்ற சிறப்பை இந்த 4 பேரும் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குவைத்தின் புதிய பட்டத்து இளவரசர்:

naveen santhakumar

அமெரிக்காவில் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் அரிய நோய் குறைபாடு…

naveen santhakumar

யார் இந்த சாமுவெல் மோர்ஸ்..???

naveen santhakumar