உலகம்

யார் இந்த சாமுவெல் மோர்ஸ்..???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இன்று ஏப்ரல் 27  இன்றுதான் சாமுவெல் மோர்ஸ்  சுருக்கமாக சாமுவெல் ஃபின்லே பிரீஸ் மோர்ஸ் 1761-ஆம் ஆண்டு பிறந்தார். ஏப்ரல் 23 உலக மோர்ஸ் கோட் தினமாக கொண்டாடப்படுகிறது.

சரி, யார் இந்த சாமுவேல் மோர்ஸ்?

ஒற்றைக்-கம்பி தந்தி முறை மற்றும் மோர்ஸ் தந்திக் குறிப்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்த அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும் வரலாற்றுக் காட்சிகளை வரையும் ஓவியரும் ஆவார்.

பிறப்பு:-

சாமுவெல் மோர்ஸ் மாஸ்ஸாசுசெட்ஸில் அமைந்துள்ள சார்லஸ்நகரத்தில் புவியியலாளர் மற்றும் போதகரன ஜேடிடியா மோர்ஸ் (1761–1826) மற்றும் எலிசபத் ஆன் ஃபின்லே பிரீஸ் (1766–1828) ஆகியோருக்கு முதல் குழந்தையாகப் பிறந்தார்.

தந்தி முறை:-

இன்றைய தொலைத்தொடர்பு சாதனங்கள் அனைத்துக்கும் மூதாதை என்றால் அது தந்தி தான். 

தந்தி (Telegraph) எனப்படுவது ஓரிடத்திலிருந்து தொலைவில் உள்ள வேறோரு இடத்திற்கு விரைந்து செய்தியனுப்பப் பயன்படுத்தப்படும் கருவி ஆகும். இதில் செய்திகளை அனுப்ப எந்தவொரு பொருளும் எடுத்துச் செல்லப்படுவதில்லை. இதில் சங்கேத முறையில் அனுப்பப்படும் செய்தியைப் பெற அனுப்புநரும் பெறுநரும் இந்தக் குறிமுறையை அறிந்திருக்க வேண்டும்.1837 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த சாமுவெல் மோர்சு என்பவர் கண்டுபிடித்தார்.

மோர்ஸ் கோட் கண்டுபிடிப்பு:-

மோர்ஸ் தந்திக்குறிப்புகளை முதன் முதலில் 1836-ல்  உருவாக்கியவர் சாமுவேல் பி.மோர்ஸ். தனது மனைவி லுக்ரெடியா பிக்கரிங் வாக்கர் இறந்த செய்தி முன்னரே தன்னை வந்து அடையாததால் இறுதியாக அவரது முகத்தைப் பார்க்கும் வாய்ப்புகூட இவருக்குக் கிடைக்காமல் போனது. 

அதனால், விரைவாகத் தகவல் பரிமாறிக் கொள்வதற்கான வழிமுறை ஒன்றைக் கண்டறிய மோர்ஸ் முடிவு செய்தார். 26 ஆங்கில எழுத்துக்கள் மற்றும் 0-9 வரையிலான எண்களுக்கு நிகராக ‘புள்ளி’ மற்றும் ‘கோடு’ குறியீடுகளைப் பயன்படுத்தி தந்திக்குறிப்பு எழுத்துக்களை மோர்ஸ் உருவாக்கினார். 

மோர்ஸ் கோட்:-

இன்றைய தொலைத்தொடர்பு முறை முன்னோடி என்றால் அது மோர்ஸ் கோட் தான்.

ALSO READ  104 நாட்களுக்கு பின் ஈபிள் டவர் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.
courtesy.

விரைவாகத் தகவல் பரிமாறிக் கொள்வதற்கான வழிமுறை ஒன்றைக் கண்டறிய மோர்ஸ் முடிவு செய்தார். 26 ஆங்கில எழுத்துக்கள் மற்றும் 0-9 வரையிலான எண்களுக்கு நிகராக ‘புள்ளி’ மற்றும் ‘கோடு’ குறியீடுகளைப் பயன்படுத்தி தந்திக்குறிப்பு எழுத்துக்களை மோர்ஸ் உருவாக்கினார். 

உதாரணத்திற்கு ‘A’ என்ற ஆங்கில எழுத்துக்கு ‘. _’ என்பது மோர்ஸ் குறியீடு, அதே போல் ‘1’ என்ற எண்ணிற்கு ‘. _ _ _  _’ என்பது மோர்ஸ் குறியீடு. 

இந்தக் குறிகளை டிகோடிங் செய்து கூறப்பட்டுள்ள செய்தியை மற்றவர் புரிந்து கொள்ள முடியும். 

சைகையில் தகவலை பரிமாற வேண்டுமென்றால்; முதலில் கண்களில் கூற, புள்ளியின் இடத்தில் வேகமாகக் கண் இமைக்க வேண்டும், கோட்டிற்கு மெதுவாகக் கண்களை மூடித் திறக்க வேண்டும். அதே போல் மின் விளக்கின் வாயிலாகத் தகவலை கூற, புள்ளிகளுக்குப் பதிலாக உடனே விளக்கை அணைப்பதும், கோடுகளுக்குப் பதிலாக சற்று மெதுவாக விளக்கை எரியவிட்டு பின் அணைப்பதும் கூறவரும் செய்தியைத் தெரிவிக்கும்.

போர் கைதியை காப்பாற்றிய மோர்ஸ் கோட்:-

வியட்நாம் போரின் போது அமெரிக்காவின் போர் விமானப் படையை சேர்ந்த ஜேரேமியா டெண்டன் என்பவர் வட வியட்நாமில் போர் கைதியாக காற்றுகூட சரியாக நுழையாத அறையில் அடைத்து வைக்கப்பட்டார். 

courtesy.

போர் கைதிகளை நடத்துவதற்கென சர்வதேச அளவில் சில விதிமுறைகள் உள்ளது, ஆனால் வியட்நாமின் சிறையில் அமெரிக்க போர் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். போர்க் குற்றத்தில் இருந்து தப்பிக்க, உண்மையை மறைக்க முடிவு செய்த வியட்நாம் அரசு அமெரிக்க வீரர் டெண்டனை பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தது. 

கேட்கும் கேள்விகளுக்கு இந்தப் பதில்கள்தான் கூற வேண்டும் என்ற நிர்பந்தத்துடன் அவரை அனுப்பினர். அவர்கள் வற்புறுத்தியது போல் பத்திரிகையாளரின் கேள்விகளுக்கு  பதிலளித்த டெண்டன் அதே சமயத்தில் தனது கண்களை இமைத்து மோர்ஸ் கோடில் ‘T-O-R-T-U-R-E’ என்ற தகவலை பதியச் செய்தார். 

ALSO READ  இந்திய பிரதமருக்கு தேர்தலை நடத்தும் நித்தியானந்தா.....

இந்தக் காணொளி நேர்காணல் அமெரிக்காவில் உள்ள அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பப் பட்டது. இந்த மோர்ஸ் கோடை புரிந்து கொண்ட அமெரிக்க அதிகாரிகள், கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் சித்திரவதையிலிருந்து அமெரிக்க போர் கைதிகளை மீட்டனர்.

உலகின் முதல் தந்தி சேவை:-

உலகின் முதல் தந்தி, 1844ம் ஆண்டு மே, 1ம்தேதி, அமெரிக்காவில், வாஷிங்டன்னுக்கும், பால்டிமோருக்கும் இடையே அனுப்பப்பட்டது. இவற்றுக்கு இடையே உள்ள தூரம், 40 மைல். 

இந்தியாவில் முதல் தந்தி சேவை கொல்கத்தா நகருக்கும், டைமண்ட் துறைமுகத்துக்கும் இடையே, 1850ம் ஆண்டு, கிழக்கு இந்திய கம்பெனி நிர்வாகிகளுக்கு இடையே, முதல் தந்தி அனுப்பப்பட்டது.

1851ம் ஆண்டு முதல், அக்கம்பெனியின் பயன்பாட்டுக்கு மட்டும் தந்தி சேவை அறிமுகமானது. தொடர்ந்து நாடு முழுவதும், 6,400 கி.மீ., தூரத்துக்கு, தந்தி கம்பிகள் பதிக்கப்பட்டு, 1853ம் ஆண்டு முதல், தந்தி சேவை துவங்கியது. 

1854ம் ஆண்டு முதல் தந்தி சேவைக்கு என, தனித் துறை துவங்கப்பட்டது. 1885ம் ஆண்டு தந்தி சேவைக்கான சட்டம் வகுக்கப்பட்டது.

1902 முதல் கம்பி இல்லா தந்தி சேவை அறிமுகம் செய்யப்பட்டது.

இந்திய அஞ்சல் துறை சார்பில் வழங்கப்பட்டு வந்த இந்தச் சேவை, 1990-முதல் தொலைத்தொடர்புத் துறைக்கு மாற்றப்பட்டது. பின்னர் 2000இல் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.

இந்தியாவில் தந்தி சேவை ஜூலை 14 – 2013 இரவு 10 மணியுடன் நிறைவடைந்தது. 

டெல்லி ஜன்பத் தந்தி நிலையத்திலிருந்து அஸ்வனி மிஸ்ரா என்பவர் ராகுலுக்கும், தூர்தர்ஷன் செய்தி சேனல் இயக்குனர் ஜெனரல், எஸ்.எம்.கானுக்கும், வாழ்த்து தந்தி  அனுப்பியது தான் இந்தியாவின் கடைசி தந்தி சேவை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவா we don’t care: ஜாலியாக இருக்கும் ஐரோப்பிய நாடு…

naveen santhakumar

8 ஆண்டுகள் நீடித்த மர்மத்தை கண்டுபிடித்த 6 வயது சிறுவன்…

naveen santhakumar

நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜுக்கு தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி வழங்கிய கவுரவம்!

Shanthi